கண்ணியக்குறைவான பேச்சு
11 Apr 2026, 5:30 am

கண்ணியக்குறைவான பேச்சு

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக மகளிரணி தலைவர்கள் கண்டனம். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக்குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் என்று கூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாலியல் ரீதியான கட்டாயத்தில் இருப்பதுபோல் பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து எடப்பாடியின் பேச்சு இருக்கிறது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை அதிமுகவினர் செயல்திட்டமாகவே வைத்துள்ளனர். பொதுவெளிக்கு வரும் பெண்களை அதிமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் என திமுக மகளிரணி தலைவர்கள் தெரிவித்தனர்.