ஆத்துப்பாளையத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
19 Feb 2026, 3:09 pm
<p><strong>ஆத்துப்பாளையத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், பிப்.19 – திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆத் துப்பாளையம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக் குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளி மாண வர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வழிப்போக் கர்கள் என அனைத்துத் தரப்பினரும் அச் சத்தில் வாழ்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக மாநகராட்சிக்கு அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள் ளது. திருப்பூர் மாநகராட்சியின் 10 ஆவது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பிரதான சாலை, காமாட்சியம்மன் கோவில் வீதி, பாரதி நகர், ஸ்ரீ சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரி கின்றன. குறிப்பாக, ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்ப தால், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் கடும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலை குறித்து வாலிபர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ் கூறுகை யில், எங்கள் பகுதியில் தெரு நாய்த் தொல்லை அதிகரித்துவிட்டது. சிறுவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித் துள்ளன. மேலும், ஆத்துப்பாளையம் பாலம் அருகில் இரவு நேரங்களில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். ஒவ்வொரு இரவும் இறைச்சிக் கழிவுகள் பாலம் அருகில் கொட்டப்படுகின்றன. இந்த துர்நாற்றம் வீசும் கழிவுகளை உண்ணுவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தெல்லாம் நாய்கள் இங்கு வந்து குவிகின்றன. இதனால் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த நாய்கள் ஒன் றோடொன்று சண்டையிட்டுக்கொள்வதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் செல்வதே பயமாக இருக்கிறது, என அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவிக்கின் றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வா கத்திற்கு தகவல் அளித்தால் மாநகராட்சியில் ஒரே ஒரு நாய் பிடிக்கும் வாகனம் மட்டுமே இருப்பதாகவும், எங்கள் புகாரைப் பதிவு செய்து கொள்வதாகவும் மட்டும் சொல்கி றார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்தப் பிரச்சினை வெறும் தொல்லையாக மட்டும் இல்லாமல் பொது சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத் துள்ளது. நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ரேபிஸ் பரவும் அபாயமும் அதிக ரித்துள்ளது. எனவே பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்ட அனுமதிக் ்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது டும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சந்தோஷ் வலியுறுத்தினார்.</p>
