தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பறக்கும் படையால் அதிகரித்த ஆன்லைன் பரிமாற்றம்!

23 Mar 2026, 5:33 pm
பறக்கும் படையால் அதிகரித்த ஆன்லைன் பரிமாற்றம்!
<p><strong>பறக்கும் படையால் அதிகரித்த ஆன்லைன் பரிமாற்றம்!</strong></p> <p>வாக்காளர்களுக்கு பணம் மற் றும் பரிசுப் பொருட்கள் விநியோ கிப்பதை தடுக்கும் நோக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் உரு வாக்கப்பட்ட பறக்கும் படைகள். &nbsp;பணம், பரிசுப் பொருட்களை &nbsp;கொடுப்பவர்களை பிடிக்கிறதோ, இல்லையோ, சாதாரண சிறு வியா பாரிகளின் தலையில் கல்லைப் போட்டு வருகிறது. இதன் காரண மாக, பொதுமக்களும் வியாபாரி களும் தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நோக்கி நகர் கின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடை பெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தீவிரமாக அமல்படுத்தப் பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் &nbsp;படையினர் மற்றும் காவல்துறையி னர் முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து &nbsp;24 மணி நேரமும் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய &nbsp;ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் &nbsp;வைத்திருந்தால் அவை உடனடி யாகப் பறிமுதல் செய்யப்பட்டு அரசு &nbsp;கருவூலத்தில் ஒப்படைக்கப்படு கின்றன. இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், சுப நிகழ்ச்சி களுக்காகவும் பணம் கொண்டு செல் பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளா கியுள்ளனர். இந்த கெடுபிடிகளால் கையில் &nbsp;ரொக்கப் பணத்தை கொண்டு செல்ல &nbsp;பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து நாமக்கல் - ஈரோடு சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் முருகன் கூறுகையில்: &rdquo;எங்கள் கடைக்கு வரும் &nbsp;பெரும்பாலான வாடிக்கையாளர் கள் அண்டை மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். தற் போது ஒரு கட்டில், பீரோ அல்லது &nbsp;மெத்தை வாங்கினாலே அதன் விலை 40 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடுகிறது. வாகனச் சோதனையில் சிக்கினால் ஆவணங் களைக் காட்ட முடியாமல் பணம் பறி முதல் செய்யப்படுமோ என்ற பயம் &nbsp;மக்களிடம் உள்ளது. இதனால், இப் போது 90 சதவீத வாடிக்கையா ளர்கள் கூகுள் பே, போன் பே &nbsp;அல் லது நேரடியாக வங்கிக் கணக் கிற்கு பணம் அனுப்புவதையே பாதுகாப்பானதாக கருதுகின்ற னர்.&rdquo; பர்னிச்சர் மட்டுமன்றி நகைக் கடை, மொத்த ஜவுளி வியாபாரம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தற்போது அரை பவுன் &nbsp;தங்க நகையின் விலையே 60 &nbsp;ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ள &nbsp;நிலையில், நகை வாங்க வருபவர் கள் கிரெடிட் கார்டு அல்லது ஆன் லைன் பரிவர்த்தனைகளை நாடு கின்றனர். நகை வாங்கியதற்கான ரசீது கையில் இருப்பதால், நகையை எடுத்துச் செல்வதில் சிக்கல் இருக்காது என அவர்கள் நம்புகின்றனர். வியாபாரிகளின் கோரிக்கை மற்றும் அச்சம் டிஜிட்டல் பரிவர்த்தனை ஒரு புறம் கைகொடுத்தாலும், அதிகப் படியான பணப் பரிவர்த்தனை நடக் கும் வங்கி கணக்குகளை தேர் தல் ஆணையம் கண்காணிப்பதாக எழுந்துள்ள தகவல் வியாபாரிகளி டையே கலக்கத்தை ஏற்படுத்தியுள் ளது. &rdquo;தேர்தல் நேரத்தில் முறை கேடுகளை தடுக்க எடுக்கப்படும் &nbsp;நடவடிக்கைகள் வரவேற்கத்தக் கவைதான். ஆனால், வியாபார நிமித்தமாக நியாயமான முறையில் &nbsp;நடக்கும் பணப் பரிவர்த்தனைக ளுக்குத் தடை அல்லது நெருக் கடி ஏற்பட்டால் தொழில் கடுமை யாகப் பாதிக்கப்படும். தேர்தல் ஆணையம் இதில் சிறு குறு வியா பாரிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்,&rdquo; என்பதே வணி கர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை யாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.