தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வார ஓய்வு நேரத்தை அதிகரித்திடுக! அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

2 Dec 2025, 4:11 pm
வார ஓய்வு நேரத்தை அதிகரித்திடுக! அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள்  சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
<p><strong>வார ஓய்வு நேரத்தை அதிகரித்திடுக! அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் &nbsp;சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.2- &nbsp;வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுநர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையம் அருகில் 48 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய் அன்று துவங்கியது. &nbsp;உண்ணா விரதப் போராட்டத்திற்கு அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க கோட்டச் செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி டி.ஆர்.இ.யு கோட்டச் செயலாளர் கரிகாலன், கோட்ட தலைவர் சிவக்குமார், துணைப்பொதுச் செயலாளர் ராஜா, ஏ.ஐ.எஸ்.சி.எஸ்டி தென்மண்டல பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, டி.ஆர்.இ.யு.சி.சி.ஆர்.சி கிளை தலைவர் எஸ்.எஸ். கணேசன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.