கையில் எடுத்துச்செல்லும் பணத்தின் மதிப்பை உயர்த்திடுக
24 Mar 2026, 3:23 pm
<p><strong>கையில் எடுத்துச்செல்லும் பணத்தின் மதிப்பை உயர்த்திடுக</strong></p>
<p>போராட்ட அறிவிப்பு உதகை, மார்ச் 24- தேர்தல் சமயத்தில் வணிகர் கள் கையில் எடுத்து செல்லும் பணத் தின் மதிப்பை தேர்தல் ஆணையம் உயர்த்த வேண்டும். இல்லையெ னில், மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் எ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள் ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா தலைமை யில், வணிகர் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் 43 ஆவது மாநில மாநாடு, மே 5 ஆம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தின் மூல மாக 35 சதவிகித சில்லறை வணிகர் களின் வியாபாரம் பறிபோய்விட் டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்ததால், 5 ஆண்டுகளில் 15 லட்சம் கடைகள் காணாமல் போய் விட்டன. இதை கட்டாயமாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளோம். உதகை மாஸ்டர் பிளான் திட் டத்தை மாற்றியமைக்க வேண்டும். குன்னூர், உதகை பகுதிகளில் வியாபாரிகளுக்கு விரைவாக கடைகள் கட்டித்தர வேண்டும். தொழில் நடத்த இயலாத நிலையி லுள்ள சிறு வணிகர்களுக்கு ஒன் றிய அரசு மாதம் ரூ.25 ஆயிரம் நிதியு தவி வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக உறுதி தருகிற வர்களுக்கு, எங்களது ஆதரவு இருக்கும். சட்டப்பிரச்சனை ஏற்படும்போது அரசு, வணிக சங்க பிரதிநிதிகளை கலந்து ஆலோசிப்பதற்கு ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். கடைகளின் உரிமம் எங்களுடைய அடையாளம். இதை அரசு வருமா னமாக்கக்கூடாது. ஆயுட்கால உரிமமாக வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கையில் எடுத்து செல் லும் பணத்தின் மதிப்பை உயர்த்த வேண்டும். இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்யாவிட்டால் தேர்தல் ஆணையத்தை கண் டித்து மார்ச் 31 ஆம் தேதி முதற் கட்டமாக சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும். தொடர்ந்து, நிலை மாறவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத் தப்படும். தொடர்ந்து, கடைய டைப்பு போராட்டம் நடத்தப்படும். மேலும், கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற் பனை செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். விளாத்திகுளம் பகுதியில் பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட சம்ப வத்தில் சிறைக்கு சென்று மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து, அதே குற்றங்களைச் செய்ய வாய்ப்புள் ளது. எனவே, இத்தகைய கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல் துறையினர் எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முழு உறுதுணையாக நிற்கும், என்றார்.</p>
