தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்துக! பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

13 Dec 2025, 5:13 pm
பால் கொள்முதல் விலையை உயர்த்துக! பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்துக! பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்</strong></p> <p>பெரம்பலூர், டிச.13- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஏழாவது மாநாடு பெரம்பலூர் சின்னசாமி நினைவரங்கத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் என். செல்லத்துரை தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை ரெங்கராஜ் ஏற்றி வைத்தார். சதாசிவம் அஞ்சலி தீர்மானத்தையும், மாவட்டச் செயலாளர் செங்கமலை வேலை அறிக்கையையும் வாசித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில தலைவர் கே. முகமது அலி மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் பெருமாள் நிறைவுரையாற்றினார். முன்னதாக மதியழகன் வரவேற்புரையாற்றினார். ராமு நன்றி தெரிவித்தார். தவிடு, பருத்தி க்கொட்டை புண்ணாக்கு, கலப்பு தீவனங்கள், கால்நடைகள் விலை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு பசு மாட்டு பாலுக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.60 உயர்த்தி விலை அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைப் போல் ஊக்கத்தொகை ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக என்.செல்லத்துரை, மாவட்டச் செயலாளராக முத்து, மாவட்ட பொருளாளராக சின்ராஜ், மாவட்டத் துணைத் தலைவர்களாக பாலகிருஷ்ணன், செங்கமலை, மதியழகன், மாவட்டச் செயலாளர்களாக சதாசிவம், சதீஷ்குமார் அம்சவல்லி, சங்கர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.