செய்தியாளர் ’பாஸ்’ எண்ணிக்கையை உயர்த்திடுக
20 Mar 2026, 2:55 pm
<p><strong>செய்தியாளர் ’பாஸ்’ எண்ணிக்கையை உயர்த்திடுக</strong></p>
<p>கோவை, மார்ச் 20- தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்கும் பத்திரி கையாளர்களுக்கு வழங்கப்படும் அனு மதி சீட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோயம் புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தேர் தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத் துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி யும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெற உள்ளது. இத்தேத் தல் தொடர்பான செய்திகளைச் சேக ரிக்க, ஒரு நாளிதழுக்கு ஒரு செய்தி யாளர், ஒரு ஒளிப்பதிவாளர் மற்றும் ஒரு தொலைக்காட்சிக்கு ஒரு செய்தியா ளர், ஒரு ஒளிப்பதிவாளர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாளிதழ்க ளுக்கு ‘2+1’ (இரண்டு செய்தியாளர்கள் + ஒரு புகைப்படக் கலைஞர்) மற்றும் தொலைக்காட்சிகளுக்கு ‘1+1’ என வழங்கப்பட்ட எண்ணிக்கையே போது மானதாக இல்லை என தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழ லில், தற்போது அந்த எண்ணிக்கையை யும் குறைத்திருப்பது செய்தியாளர்களி டையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து கோயம்முத்தூர் பத் திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கோவை மாநகரம் பல முக்கிய நாளி தழ்களின் மண்டல தலைமை அலுவ லகங்கள் செயல்படும் இடமாகும். இங்கு ஒரு செய்தியாளர் மற்றும் ஒரு புகைப்படக் கலைஞர் மட்டுமே அனும திப்பது செய்தி சேகரிப்பில் பெரும் நடைமுறை சிக்கல்களை உருவாக் கும். குறிப்பாக, நேரலை (Live Unit) வசதி கொண்ட முன்னணி தொலைக் காட்சிகளுக்கு தற்போது அறிவிக்கப் பட்டுள்ள எண்ணிக்கை எந்த விதத்தி லும் போதுமானதாக இருக்காது. இத னால் தேர்தல் நிகழ்வுகளை உடனுக் குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளது.” எனவே, கள எதார்த்தத்தை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் நாளிதழ் களுக்கு, தலா 3 செய்தியாளர்கள் மற் றும் 2 புகைப்படக் கலைஞர்கள். தொலைக்காட்சிகளுக்கு, தலா 2 செய்தி யாளர்கள் மற்றும் 2 ஒளிப்பதிவாளர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய அங்க மான தேர்தல் குறித்த தகவல்கள் தங்கு தடையின்றி மக்களை சென்றடைய, மாவட்ட நிர்வாகமும் தேர்தல் ஆணை யமும் இந்த நியாயமான கோரிக் கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என பத்திரிகையாளர் மன் றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேபோன்று இதர மாவட்டங்களி லும், தேர்தல் செய்தி சேகரிப்பு பணி யினை மேற்கொள்ள கூடுதல் ஊடகவி யலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.</p>
