மீட்டர் கட்டணத்தை உயர்த்தி ஆட்டோ செயலியை அமல்படுத்துக! தமிழகம் தழுவிய ஆவேச ஆர்ப்பாட்டம் சென்னையில் 1,000 தொழிலாளர்கள் கைது!
24 Feb 2026, 3:55 pm
<p><strong>மீட்டர் கட்டணத்தை உயர்த்தி ஆட்டோ செயலியை அமல்படுத்துக! தமிழகம் தழுவிய ஆவேச ஆர்ப்பாட்டம் சென்னையில் 1,000 தொழிலாளர்கள் கைது!</strong></p>
<p>சென்னை, பிப்.24 - கடந்த 13 ஆண்டுகளாக மாற்றியமைக் கப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உடனடி யாக உயர்த்த வேண்டும் மற்றும் உயர்த்தப் படுகிற கட்டண அடிப்படையில் அரசு சார்பில் பிரத்யேக ஆட்டோ செயலியைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைதியான முறையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதற்கு சம்மேளனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், பைக் டாக்ஸியைத் தடை செய்ய வேண்டும்; ஓலா, உபெர், ரேபிட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங் களின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் மற்றும் எஃப்சி (FC) கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. மேலும், நலவாரியப் பணப் பலன்களை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வா தாரக் கோரிக்கைகளை முன்வைத்து ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத் தலைவர் வி.குமார் தலைமையில் 150-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். திண்டுக்கல்லில் சம்மேளனப் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி மற்றும் என்.பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேசமிக்க போராட்டத்தை நடத்தினர். திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் துணைப் பொதுச் செயலாளர் எம்.சந்திர சேகரன் கலந்து கொண்டார். திருச்சியில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் நெல்லையில் ஆர்.முருகன், திருவண்ணாமலையில் கே.சர வணன், கன்னியாகுமரியில் எஸ்.சோபன ராஜ், சாத்தூரில் கே.விஜயகுமார் ஆகி யோர் தலைமையில் போராட்டங்கள் நடை பெற்றன. மேலும் சிவகாசி, இராஜபாளையம், சிவ கங்கையில் சி.கண்ணன், எஸ்.விஜயகுமார், திருவாரூரில் ஆர்.ராஜேந்திரன், தென்காசி யில் வன்னியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை, சேலம், ஈரோடு, கரூர், அரியலூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, செங்கல் பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ சங்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர். சென்னையில் போக்குவரத்து ஆணை யர் அலுவலகம் முன்பு வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஜன நாயக ரீதியில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் சம்மேளனச் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், மாநிலப் பொருளாளர் இ.உமாபதி, உதவிப் பொதுச் செயலாளர் வி.ஜெயகோபால், மாநிலத் துணைத் தலைவர்கள் ஜே.முகமது ஹனிபா, ஆர்.கபாலி மற்றும் டி.சாந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். அமைதியான முறையில் போராடிய தொழிலாளர்களைக் காவல்துறை வலுக் கட்டாயமாகக் கைது செய்தது கண்டனத் திற்குரியது என சம்மேளனம் தெரிவித் துள்ளது. ஜனநாயக இயக்கங்களின் நட வடிக்கைகளை முடக்கும் வேலையில் ஈடு பட்டுள்ள சென்னை காவல்துறைக்கு சம்மேளனத் தலைவர் வி.குமார் மற்றும் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிப்.25 (புதன்கிழமை) அன்று மதுரை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
