தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு

25 Mar 2026, 5:29 pm
காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு
<p><strong>காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு</strong></p> <p>உதகை, மார்ச் 25- மஞ்சூரில் கடைவீதி மற்றும் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வரு வதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே மெரி லேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கணக் கான குடும்பத்தினர் வசித்து வரும் இக் கிராமங்களை சுற்றிலும், தேயிலை தோட்டங் களுடன் அடர்ந்த வனப்பகுதிகள் சூழ்ந்துள் ளது. சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக, காட்டெருமைகள் அதிகள வில் உலா வருகின்றன. கிராமங்களில் ஏராள மான விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், விளை &nbsp;நிலங்களில் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன், தோட்டங்களையும் சேதப்படுத்தி வரு கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி கள், பலர் மலை காய்கறி விவசாயம் மேற் கொள்வதை விட்டுவிட்டனர். மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்க ளாக காட்டெருமை ஒன்று, கூட்டத்திலிருந்து பிரிந்து உலா வருகிறது. இந்த காட் டெருமை தேயிலை தோட்டங்களில் இலை &nbsp;பறிக்கும் தொழிலாளர்களை கண்டால் &nbsp;விரட்டுவதாக கூறுகின்றனர். இதனால் &nbsp;தேயிலை இலை பறிக்க செல்லும் தொழிலா ளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் &nbsp;தேயிலை தோட்டத்திலிருந்து வெளியேறி &nbsp;இந்த காட்டெருமை கடைவீதியில் உலா வரு கிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத் திற்கும், வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு &nbsp;ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற் சாலை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமையை கண்டு தொழிலாளர்கள் பீதியடைந்து, தோட்டத்திலிருந்து உடனடியாக வெளி யேறினர். எனவே, மஞ்சூர் பகுதியில் சுற்றி &nbsp;வரும் காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.