தெருக்கூத்து கலைஞர்களை நலவாரியத்தில் இணைத்திடுக
23 Nov 2025, 6:20 pm
<p><strong>தெருக்கூத்து கலைஞர்களை நலவாரியத்தில் இணைத்திடுக தமுஎகச தருமபுரி மாநாட்டில் தீர்மானம்</strong></p>
<p>தருமபுரி, நவ.23- தெருக்கூத்து கலைஞர்களை நலவாரியத்தில் இணைக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என தமுஎ கச தருமபுரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் தரும புரி மாவட்ட மாநாடு முத்து இல்லத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங் கத்தின் மாவட்டத் தலைவர் எ.கொ. அம்பேத்கர் தலைமை வகித்தார் கவிஞர் நவகவி, எழுத்தாளர் ஆதி முதல்வன், சுகந்தி பாஸ்கரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.சிங்கார வேலு அறிக்கையை முன்வைத் தார். மாநில செயற்குழு உறுப்பி னர் மேட்டூர் வசந்தி கருத்துரையாற் றினார். புலவர் நாகை பாலு வாழ்த்திப் பேசினார். இம்மாநாட் டில், சிந்து சமவெளி நூற்றாண்டு நிறைவையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டு ரை போட்டி நடத்தி பரிசளிப்பது; தரு மபுரியில் டிசம்பரில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா முன்வைத்த கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன் றிய அரசு ஏற்க வேண்டும். நடுகற் கள் உட்பட மாவட்டத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை பாது காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல் லூரிகளிலும் வாசிப்பு வட்டங்கள் அமைத்து மாணவர்களிடம் வாசிப் புப் வழக்கத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தெருக்கூத்து கலைஞர்கள் அனை வரையும் நலவாரியத்தில் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். நலவாரிய பயன்கள் அனைவருக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக சுகந்தி பாஸ்கரன், செயலாளராக வே.விஸ்வநாதன், பொருளாள ராக கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்களாக பேராசிரியர் கு.சிவப்பிரகாசம், மருத்துவர் பகத் சிங், துணைச்செயலாளர்களாக செந்தில், செல்வி சாரா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 25 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்ன தாக, பாடகர் ராமலிங்கம் பாடல்கள் மற்றும் நவகவியின் கவிதை வாசிப்பு மாநாட்டில் இடம்பெற் றது.</p>
<p> </p>
