முந்தய பக்கம்

வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் பவள விழா

22 May 2026, 9:37 pm
வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் பவள விழா
<p><strong>வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் பவள விழா</strong></p><p>சென்னை, மே 22 - வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் 75 ஆவது ஆண்டு (பவள) விழா துவக்க நிகழ்ச்சி புதனன்று (மே 20) சென்னை வருமான வரித் துறை அலுவலக கலையரங்கில் நடைபெற்றது. சம்மேளன கொடியை முன்னாள் தலைவர் எம்.சந்தானம் ஏற்றினார். சம்மேளனத்தின் தலைவர் ஆர்.ஆர்.ஷியாம் நாத், வருமான வரி அதிகாரிகள் சங்கத் தலைவர் சி.பி.சாலமன், வருமான வரி ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் ஜி.கணேஷ்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் சுனில் பாஜ்பாய், திரைக் கலை ஞர் எஸ்.கார்த்தி, வருமான வரி புலனாய்வு இயக்குநர் அருண் சி பரத் ஆகியோர் உரையாற் றினர். வருமான வரி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஜி.கண்ணன், வருமான வரி ஓய்வூதியர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.எல்.பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சர்க்கிள் மாநில பொதுச் செயலாளரு மான எம்.எஸ்.வெங்கடேசன் நிறைவுரையாற்றி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram