தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

12 Nov 2025, 5:43 pm
சென்னை விரைவு செய்திகள்

மருத்துவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை, நவ,12- சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டு வாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் வரு மான வரித்துறை அதிகாரி கள் புதன்கிழமை காலை யில் சோதனை நடத்தி னார்கள். இதேபோன்று வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. 2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 2 பேர் வீட்டில் இருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஹெச்ஐவி தொற்று பயத்தால் இரண்டு பேர் பலி

கிருஷ்ணகிரி, நவ.12 ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகர் பகுதியில் வாகனப் போக்கு வரத்து தொழில் செய்து கொண்டிருந்த குடும்பத் தலைவருக்கு ஹெச்.ஐ.வி. (எய்ட்ஸ்) தொற்று இருப்பது கண்டறி யப்பட்டது. இவருக்கு மனைவியும், தனியார் பள்ளியில் படித்து வரும் 17 வயது மகள், 9 வயது மகன் உள்ளனர். கணவருக்கு நோய் தொற்று காரண மாக மன உளைச்சலில் இருந்த மனைவி, தனக்குப் பரிசோதனை செய்து பார்த்ததில் ஹெச்.ஐ.வி. இருப்பது கண்டு கடும் வேதனையில் இருந்துள்ளார். இந்நிலை யில், தன் 9 வயது மகனுக்கும் அதே தொற்று இருப்பதாக மருத்துவர்கள் பரி சோதித்துக் கூறியுள்ளனர். ஏற்கனவே தன் கணவன் இத்தொற்றினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், தனக்கும் மகனுக்கும் இதே தொற்று உள்ளதை அறிந்து அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து, தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் காவல் துறை யிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்காகத் தாய் மற்றும் மகன் உடல்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மன உளைச்சலில் இருந்த தாய், தன் மகனுக்கும் இதே தொற்று இருப்பதாகத் தெரிந்ததால், இரவில் தன் மகனைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓசூர் காவல்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

‘ராயல் பிரசாந்த் கருத்தரித்தல் மையம்’ சர்வதேச கிளை திறப்பு

சென்னை, நவ.12- இந்தியாவின் முன்னணி கருத்தரித்தல் சிகிச்சை மையமான பிரசாந்த் கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம், இலங்கையின் கொழும்பில் உள்ள பிரபல ராயல் மருத்துவமனையுடன் இணைந்து தனது முதல் சர்வதேச கிளையான ராயல் பிரசாந்த் கருத்தரித்தல் மையத்தைத் திறந்து வைத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்து பல தம்பதிகள் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்ததைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முழுமையான, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதற்காக இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பிரத்யேக கரு ஆய்வகம், கரு பாது காப்பு வசதிகள், மேம்பட்ட கருத்தரித்தல் மற்றும் கருப்பை தூண்டுதல் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அதி நவீன தொழில்நுட்பங்களும் சர்வதேச தரத்தில் நிறுவப்  பட்டுள்ளன. டாக்டர் கீதா ஹரிப்ரியா மற்றும் பிரசாந்த் மையத்தில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இந்தக் குழுவை வழிநடத்துவார்கள். நிறுவனர் டாக்டர். கீதா ஹரிப்ரியா, இந்தியாவில் அளிக்கும் அதே தரமான மருத்துவ சேவையை இலங்கை தம்பதிகளுக்கு வழங்குவது தங்கள் விருப்பம் என்று கூறினார். இது, தெற்காசியா முழுவதும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான பிரசாந்த் குழுமத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு

குடிநீர் வண்டியில் இருந்து  தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கடலூர், நவ.12- கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 56) என்பவர் தனியார் குடிநீர் விநியோகம் செய்யும் வண்டியின் உதவியாளராகப் பணி செய்து வந்தார். புதன்கிழமை காலை குடிநீர் வண்டியில் செல்லும் பொழுது, வண்டியில் இருந்து தவறி விழுந்ததில், வண்டி யின் பின் சக்கரம் அவர் வயிற்றுப் பகுதியில் ஏறியதால் விபத்துக்குள்ளாகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் மது கடத்திய புதுச்சேரி வாலிபர் கைது

விழுப்புரம், நவ. 12- திண்டிவனம் அருகே பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையின்போது மது கடத்தி வந்த புதுச்சேரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் பாலமுரளி மற்றும் காவலர்கள் தலைமையில் பெரும்பாக்கம் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். காரை ஓட்டிவந்தவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் புதுச்சேரி மாநிலம், செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் கார்த்திக் (வயது 24) எனத் தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் காரைப் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.