முந்தய பக்கம்

வாலிபர் சங்க புதிய கிளை துவக்க விழா

11 Jan 2026, 2:59 pm
வாலிபர் சங்க புதிய கிளை துவக்க விழா
<p><strong>வாலிபர் சங்க புதிய கிளை துவக்க விழா</strong></p> <p>அறந்தாங்கி, ஜன.11- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்னி பஜார் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதிய கிளை துவக்க விழா, அரபி பள்ளி அருகில் நடைபெற்றது. &nbsp;நிகழ்ச்சிக்கு, ஆர். ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், இம்ரான் நசீர், முகம்மது ஹைப், முகமது ஹாலித், யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் வாலிபர் சங்க கொடியை ஏற்றினார். &nbsp;ஆர். ஜெகதீஸ்வரன் தலைவராகவும், முகம்மது ஹைப் துணைத் தலைவராகவும், இம்ரான் நசீர் செயலாளராகவும், யாசர் அரபாத் பொருளாளராகவும் தேர்வு செய்யபட்டனர். &nbsp;சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன், வழக்கறிஞர் சங்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எல். அலாவுதீன், முன்னாள் மாவட்ட தலைவர் கர்ணா, வி.ச ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் முருகேசன், திமுக பிரமுகர் தீன், மக்கள் ஜனநாயக கட்சி நகரச் செயலாளர் ரியாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram