ஆலங்குளத்தில் புதிய பேருந்து நிலைய கட்டிட பணிகளை துவக்கிடுக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>ஆலங்குளத்தில் புதிய பேருந்து நிலைய கட்டிட பணிகளை துவக்கிடுக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தென்காசி, பிப். 19- ஆலங்குளத்தில், புதிய பேருந்து நிலைய கட்டிட பணி களை உடனடியாக துவக்கிட வேண்டும். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினந்தோறும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆலங்குளம் செயலா ளர். சந்தனகுமார் தலைமை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர்கள் வெற்றி வேல், பால்ராஜ், ஸ்டாலின், மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்டக்குழு உறுப்பினர் இ.பாலு துவக்கி வைத்தார். தாலுகா செயலாளர். கனக ராஜ், பீடி சங்க மாவட்டச் செயலாளர் மகாவிஷ்ணு, தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் குட்டிப்புலி கார்த்திக், ஆகியோர் உரையாற்றினார்கள். மாவ ட்டச் செயற்குழு உறுப்பி னர்.குணசீலன் நிறைவுரை யாற்றினார். மருத்தம் புத்தூர் கிளை செயலாளர் பத்திரகாளி, வி .கே .புதூர் செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க நிர்வாகி நெட்டூர் லெட்சுமி, சமுத்திரராஜன், தங்கச்சாமி,15 ஆவது வார்டு திமுக கிளைச் செய லாளர் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். தாலுகா குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். வாடகை கட்டிடத்தில் இயங்கும் சிறப்பு பேரூராட்சி அலுவலகத்தை அரசு நில த்தில் சொந்த கட்டிடம் கட்டிட தென்காசி மெயின்ரோட்டின் வடபுறம் மின்வாரிய அலுவ லகத்திலிருந்து புஷ்பலதா மருத்துவமனை கீழ்புறம் வரை நீர் வழிதட ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்திட விரிவாக்க பகுதிகளில் புதிய பாதைகளை அமை த்திட வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளி மேல்புறம் உள்ள ரோட்டை மங்களா ஓடையிலிருந்து மெயின்ரோடு வரை மழை நீர் தேங்கிடாமல் உயர்த்திட மற்றும் துத்திகுளம் ரோ ட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள ரேசன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.</p>
