இனாரா–26 மாநில அளவிலான இடைக்கல்லூரி விழா
16 Feb 2026, 2:37 pm
<p><strong>இனாரா–26 மாநில அளவிலான இடைக்கல்லூரி விழா</strong></p>
<p>மதுரை, பிப்.16- லேடி டோக் கல்லூரி சமூக அறிவியல் துறை சார்பில் “நிலையான வளர்ச்சிக்கான தன்னார்வலர்கள் (சுற்றுச்சூழல் – சமூக – ஆளுகை)” என்ற தலைப்பில் இனாரா–26 மாநில அளவிலான இடைக்கல்லூரி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு கல்லூ ரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு நிலையான வளர்ச்சி மற்றும் இளைஞர் தன்னார்வத்தின் முக்கியத்து வம் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர். விழாவின் பகுதியாக குறும்படம், புகைப்படம், திடீர் பேச்சு, கலாச்சார நிகழ்ச்சி கள் உள்ளிட்ட 14 போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் பங்கேற்ற மாணவர்கள் நிலை யான வளர்ச்சி இலக்குகள், காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை வெளிப்படுத்தி னர். நிறைவுவிழாவில் அல் அமீன் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி தன்னார்வ சேவையின் சமூக மாற்றத் திற்கான முக்கியத்துவம் குறித்து உரை யாற்றினார். துறைத் தலைவர் டாக்டர் ஜாய்ஸ் ஜான் மற்றும் கழக ஒருங்கி ணைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் ஷேக் நபி மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கினார். மொத்த சாம்பி யன் பட்டத்தை அமெரிக்கன் கல்லூரி பெற்றது. இரண்டாம் இடத்தை தியாக ராஜர் கல்லூரி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
