தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இனாம் நிலங்கள், கோவில் நிலங்களா? - சாமி.நடராஜன்

14 Jul 2026, 9:10 pm
இனாம் நிலங்கள், கோவில் நிலங்களா? - சாமி.நடராஜன்

இனாம் நிலங்கள், கோவில் நிலங்களா? - சாமி.நடராஜன்

கடந்த 2026 ஜூன் 9 அன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலை வர் மற்றும் திருப்பூர் மண்டல இணை ஆணையருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங் களிலும் ஒரு விவாதம் கிளம்பியுள்ளது. பா.ஜ.க.வின் மாநிலத்தலைவர் நயி னார் நாகேந்திரன் உள்ளிட்ட இந்துத் துவ அமைப்பினர், “முதல்வர் ஜோசப் விஜய் இந்து கோவில்களின் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங் களைத் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டார்” என்று உண்மைக்குப் புறம் பான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஊடக விவாதங்களில் பங்கேற்போரும் உண்மை நிலை அறியாமல், “கோவில் நிலங்களைத் தமிழக அரசு தனியாருக்கு வழங்கி விட்டது” என கூப்பாடு போட்டு வரு கின்றனர்.

கரூர் நில விவகாரத்தின் உண்மைப் பின்னணி

அறநிலையத்துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன? கரூர் மாவட்டத்தின் புகழிமலை, கரூர் நகரம், குப்புச்சிபாளையம், வெஞ்சமாங்கூட லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு கோவில்களை உள்ளடக்கிய 15 கிரா மங்களில், 3,390 விவசாயிகளுக்குச் சொந்தமான 3084.95 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை 1963 மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் முறையாகப் பட்டா வழங்கப்பட்டு, நான்கு தலைமுறைகளாக விவசாயக் குடும்பங்களின் அனுபவத்தில் இருந்து வருகின்றன.

ஆனால், இந்த நிலங்களை அற நிலையத்துறை தவறுதலாகக் ‘கோவில் நிலங்கள்’ எனப் பத்திரப்பதிவுத் துறையிடம் முறை யிட்டு, அவற்றின் மதிப்பை ‘பூஜ்ஜியம்’ (Zero Value) எனப் பதிவு செய்தது. இதனால் நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாமல் விவசாயிகள் பெரும் துயரடைந்தனர். தங்களுடைய சொந்த நிலங்களை அனுபவிக்க முடி யாத ஒரு அநீதியான சூழல் உருவாக்கப் பட்டது. இந்த அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அறி வியல் பூர்வமான ஆவணங்களுடன் தொடர் போராட்டங்களை நடத்தி, தங்களிடம் இருந்த அனைத்துப் பழைய ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்துக் கரூர் மாவட்ட நிர்வாகம் பல மாதங்கள் விரிவான கள ஆய்வு செய்து, “பூஜ்ஜிய மதிப்பு செய்தது தவறு; இவை அனைத்தும் 1963 சட்டப்படி ரயத்துவாரி பட்டா பெற்ற நிலங்கள்தான்” என்று அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையிலேயே, அறநிலையத் துறை ஆணையர் வருவாய்த்துறை ஆவணங்களின்படி பூஜ்ஜிய மதிப்பை நீக்கலாம் எனக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த உண்மையை மூடிமறைத்து, பா.ஜ.க.வினர் ஏழை இந்து விவசாயிகளின் அடிப்படை நில உரிமையைப் பறிக்கத் துடிக்கின்றனர்.

இனாம் நிலங்கள் என்றால் என்ன?

பண்டைய இந்தியாவில் மன்னர் கள் ஆட்சி, முகலாயர் காலம், தமிழ கத்தை ஆண்ட பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் ஆட்சிகள் மற்றும் பிரிட்டிஷ் காலம் வரை நில த்தின் உரிமை அரசிடமே இருந்தது. மக்களிடம் பயிரிடும் ‘குடிவார’ (கீழ்வார) உரிமை மட்டுமே இருந்தது. விளைச்ச லில் ஒரு பகுதியை (ஆறில் ஒரு பங்கு) வரியாகவோ குத்தகையாகவோ அரசுக்கு அவர்கள் செலுத்தி வந்தனர். மன்னர்கள் தங்களது அரண் மனை அதிகாரிகள், படைத்தளபதிகள், படைவீரர்கள், ஊர்க்காவலர்கள், பிரா மணர்கள், கோவில் பணியாளர்கள், தேவதாசிகள், பொது நீர்நிலைகளைப் பாதுகாப்போர் போன்றோருக்கு ஊதி யத்திற்குப் பதிலாக நிலங்களைத் தான மாக (இனாமாக) வழங்கினர். இஸ்லா மிய, மராட்டிய மன்னர்கள் காலத்தி லும் மடங்கள், பள்ளிகள், மசூதிகளுக்கு இவை பெருமளவில் வழங்கப்பட்டன. இத்தகைய நிலங்களின் முழு உரிமையை அரசே வைத்திருந்தது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இந்த நிலங்களின் வரி யையோ அல்லது குத்தகையை மட்டு மோ கோவில்களுக்கு வழங்குமாறு மன்னர்கள் உத்தரவிட்டனர். வரியைப் பெற்றுக் கொண்ட காரணத்தால் மட்டுமே அந்த நிலங்கள் எக்காலத்தி லும் கோவில் நிலங்களாக மாறி விடாது. அவை எந்தக் கோவில் பெயரி லும் பதிவு செய்யப்படவில்லை.

இவை மூன்று வகைப்படும்

மேஜர் இனாம்: ஒரு கிராமத்தையே முழுமையாக ஒருவருக்குத் தானமாக வழங்குவது. மைனர் இனாம்: விவசாயிகள் நேரடியாகச் சாகுபடி செய்துவந்த

மைனர் இனாம்: விவசாயிகள் நேரடியாகச் சாகுபடி செய்துவந்தநிலங்கள். சர்வீஸ் இனாம்: கோவிலிலோ அல்லது அரண்மனையிலோ பணியாற்றுபவர்களுக்கு மானியமாகத் தரப்பட்ட நிலங்கள்.

செங்கொடி இயக்கத்தின் போராட்டங்களும் இனாம் ஒழிப்புச் சட்டமும்

நாடு விடுதலை பெற்ற பின், மன்னர் களின் சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்து டன் இணைக்கப்பட்டன. 1948 மார்ச் 3 அன்று மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்ப ட்டாலும், இனாமாக வழங்கப்பட்ட கிராமங்கள் பழைய நிலையிலேயே நீடித்தன. குறிப்பாகப் புதுக்கோட்டையில் 412 கிராமங்களும், தஞ்சை மற்றும் வேதாரண்யத்தில் பல கிராமங்களும் இனாம் நிலங்களாகவே இருந்தன. வேதாரண்யம் பகுதியில் மட்டும் 38 கிராமங்கள் வருவாய்த்துறை பதிவேடுகளில் இன்னும் இனாம் கிராமங்களாகவே உள்ளன. இந்த நிலங்களை உழுது பயிரிடும் விவசாயிகளுக்கே வழங்கக் கோரிச் செங்கொடி விவசாயிகள் இயக்கம் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியது. சட்டமன்றத்திலும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் இதற்காகக் கமிட்டி அமைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் “உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற கொள்கையின்படி பட்டா வழங்கக் கோரிப் போராடினர். இதன் தொடர்ச்சியாக, 1963-இல் ‘தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் 30/1963’ கொண்டு வரப்பட்டு, 1964 பிப்ரவரி 5 அன்று அமலுக்கு வந்தது. இருப்பினும், சட்ட அமலாக்கத்தில் சுணக்கம் காட்டியதால், 1969-இல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர். உமாநாத் தலைமையில் புதுக்கோட்டையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக மேலும் 116 கிராமங்கள் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மணலி கந்தசாமி, ஏ.கே. சுப்பையா உள்ளிட்டோர் வலியுறுத்தியதன் பேரில் இச்சட்டம் மேலும் 6 முறை திருத்தப்பட்டது.

இந்து விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்

முந்தைய ஆட்சிக்காலங்களில் கோவில் நிலங்களை மீட்பதாகக் கூறி, ரயத்துவாரி பட்டா பெற்ற சுமார் 12 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்களைக் கோவில் நிலங்களாக மாற்றி விவசாயிகளின் நிலவுரிமை பறிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நீதிமன்றப் படிக்கட்டுகளில் அலையவிடப்பட்டனர். ஆனால், பா.ஜ.க.வினர் கூறுவது போல் இவை கோவில் சொத்துக்கள் அல்ல. அண்மையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலையே, “இந்த நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானதல்ல, இனாம் நிலங்கள் தான்” என்று பேசியுள்ளார். மேலும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜாவும், எஸ்.கே. கார்வேந்தனும் கூட இந்த நிலங்கள் ஆலயத்திற்கு வழங்கப்பட்டவை அல்ல, அங்கு பணியாற்றுபவர்களுக்கே வழங்கப்பட்டவை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போதைய அரசு கரூரில் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்ட நிலங்களை விடுவித்ததன் மூலம் 3,390 இந்து விவசாயிகள் தங்களின் நிலவுரிமையை மீண்டும் பெற்றுள்ளனர். ஆனால், ஏழை இந்து விவசாயிகளுக்கு எதிராக டி.ஆர். ரமேஷ் போன்ற நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களுக்குக் கடவுள் மீதோ, பக்தர்கள் மீதோ அக்கறையில்லை; கோவில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். அன்றைய அரசு உரிய இழப்பீடுகளை வழங்கிவிட்டுத்தான் அனுபவத்தில் இருந்தவர்களுக்குப் பட்டா வழங்கியுள்ளது.

தமிழக அரசுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்:

• 1963 இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி பட்டியல் செய்யப்பட்டுள்ள மொத்த நிலங்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

• இச்சட்டத்தின்கீழ் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் நிலவுரிமைகளையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

• ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்ட நிலங்களை, அறநிலையத்துறை கோவில் நிலம் என்று அறிவித்துப் பூஜ்ஜிய மதிப்பு செய்துள்ள பதிவுகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்திட வேண்டும். இப்பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனி ஆணையம் ஒன்றினை அமைக்க வேண்டும்.

சங்பரிவார் அமைப்புகளின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து, உழைக்கும் விவசாயிகளின் நிலவுரிமையைப் பாதுகாக்கப் பரந்த அளவிலான மக்கள் போராட்டங்களை நாம் முன்னெடுப்போம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.