வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
15 Nov 2025, 1:19 pm
<p><strong>வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!</strong></p>
<p>சென்னை, நவ.15- இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங் கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளதாகவும், மேல் காற்று சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் வரை நீண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.</p>
