தருமபுரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...
29 Mar 2026, 3:34 pm
<p><strong>தருமபுரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...</strong></p>
<p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 3 இடங்களிலும், தேமுதிக 1 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி: பி. பழனியப்பன்(திமுக) முன்னாள் அமைச்சரான இவர், திமுகவில், மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வகித்து வருகின்றார். அரூர்: அ.சண்முகம்(திமுக) பி.எஸ்.சி படித்திருக்கும் இவர், திமுகவில் அயலக அணி மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் 1990-முதல் திமுகவின் உறுப்பினராக சேர்ந்து, கிளை கழக செயலாளர், ஒன்றிய பொருளா ளராக பொறுப்பு வகித்து பணியாற்றினார். 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை மற்றும் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பத்தாண்டு கள் தீர்த்தமலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை மாவட்ட கவுன்சிலராக பொறுப்பு வகித் தார். பாலக்கோடு: மருத்துவர் டி.என்.வி.எஸ். செந்தில் குமார்(திமுக) திமுகவில் மாநில அயலக அணி செயலாளராக பணி யாற்றி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இவர் கடந்த 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு பாமக தலைவர் அன்புமணியை வீழ்த்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
