கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...
29 Mar 2026, 3:34 pm
<p><strong>கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...</strong></p>
<p>கோவை மாவட்டத்தில் பத்து சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில், திமுக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும், கொமதேக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதன்படி, கோவை தெற்கு: வி.செந்தில் பாலாஜி (திமுக) படிப்பு - மேல்நிலை பள்ளிக் கல்வி. 2011 இல் போக்கு வரத்துத் துறை அமைச்சர். பிறகு 2018 இல் திமுகவில் இணைந்து கரூர் மாவட்டச் செயலரானார். 2021 இல் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. திமுக அமைச்சரவை யில் மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். கோவை வடக்கு தொகுதி: துரை.செந்தமிழ் செல்வன் (திமுக) பொறியியல் பட்டதாரி. B.E. ( mech)/ கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர். மேட்டுப்பாளையம் தொகுதி: கே.கவிதா கல்யாணசுந்தரம் (திமுக) எம்.காம் பட்டதாரி. இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர். வால்பாறை தொகுதி: ஆ.சுதாகர் (திமுக) கல்வி - பி.ஏ வரலாறு. வால்பாறை நகர செயலா ளர். கிணத்துக்கடவு தொகுதி: கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் (திமுக) கல்வி - பி.காம். , பி.ஜி.டி.ஐ.பி பட்டதாரி. முன்னாள் பேரூராட்சி தலைவர் சூலூர்: தளபதி முருகேசன் (திமுக) கல்வி - எம்.ஏ பட்டதாரி, கோவை தெற்கு மாவட்ட செய லாளர். தொண்டாமுத்தூர்: என்.ஆர்.கார்த்திகேயன் (திமுக) கல்வி - பி.ஏ பட்டதாரி. முன்னாள் ஊராட்சி தலை வர். பொள்ளாச்சி: நித்தியானந்தன் (கொமதேக) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக உள்ளார். திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாள ராக நித்தியானந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>
