முந்தய பக்கம்

சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...

29 Mar 2026, 3:34 pm
சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...
<p><strong>சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...&nbsp;</strong></p> <p>சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக &nbsp;8 இடங்களிலும் தேமுதிக இரண்டு இடங்களிலும் காங்கி ரஸ் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட உள்ளது. அதன்படி, சேலம் வடக்கு: இரா.இராஜேந்திரன் (திமுக) சுற்றுலாத்துறை அமைச்சரான இவர் தொடர்ந்து &nbsp;மூன்று முறை எம்எல்ஏ-வாக இருந்திருந்தார். சேலம் தெற்கு: எம். லோக நாதன் பி.எஸ்.சி படிதிருக்கும், இவர் திமுக தலைமை &nbsp;பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்காடு: டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்(திமுக) பி.எஸ்.சி., பி.எட்., படித்திருக்கும், இவர் திமுக சேலம் &nbsp;கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேட்டூர்: ம.மிதுன் சக்கரவர்த்தி(திமுக) பி.இ., படித்திருக்கும் இவர், கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். சங்ககிரி: மு.மணிகண்டன்(திமுக) இவர் திமுக மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளராக உள்ளார். கெங்கவல்லி: கு. சின்னதுரை(திமுக) எம்.இ., படித்திருக்கும், இவர் 2006 முதல் 2011 வரை &nbsp;தலைவாசல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும், திமுக சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செய லாளராகவும் உள்ளார். எடப்பாடி: சி.காசி(திமுக) இவர், ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவராகவும், திமுக மாநில நெசவாளரணி துணை செயலாளராகவும் உள்ளார். வீரபாண்டி: டாக்டர் ஆ.கா.தரூண்(திமுக) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்(ஆர்தோ)., எம்.பி.ஏ., படித்தி ருக்கும் இவர், எம்பிஏ அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து தங்கம் பதக்கம் பெற்றவர். திமுக &nbsp;தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலா ளர் உள்ளார். இரண்டாவது முறையாக வீரபாண்டி சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். சேலம் மேற்கு: அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்(தேமுதிக) தேமுதிக மாநில கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள இவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கு &nbsp;தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓமலூர்: ஏ.ஆர். இளங்கோவன்(தேமுதிக) &nbsp;தேமுதிக சேலம் மாவட்ட கிழக்கு செயலாளராக உள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram