முந்தய பக்கம்

ஒரே ஒரு ஊர்ல - பழனி சோ.முத்துமாணிக்கம்

15 Nov 2025, 1:19 pm
ஒரே ஒரு ஊர்ல - பழனி சோ.முத்துமாணிக்கம்
<p><strong>ஒரே ஒரு ஊர்ல....</strong></p> <p>&ldquo;ஒரே ஒரு ஊர்ல , ஒரே ஒரு அம்மா அப்பா.&rdquo; கதை சொல்லத் தொடங்கினார் தாத்தா. &lsquo;நிறுத்து நிறுத்து தாத்தா&lsquo; கத்தினான் கன்னல். &nbsp;&rsquo;அதானே அவங்களுக்கு அக்கா அண்ணன் மாமா சித்தப்பா பெரியப்பா யாரும் இல்லையா தாத்தா &lsquo; தம்பிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாள் அக்கா தென்றல். &rsquo;டேய், என்னங்கடா கதை கேட்டீங்க; சொல்ல விடுங்கடா&lsquo; தாத்தா கெஞ்சிக் கொஞ்சினார். &rsquo;தாத்தா.. வீடுன்னா அம்மா அப்பா சொந்தபந்தம்லாம் இருப்பாங்கல்ல. பக்கத்துல வீடு இருக்கும்ல; தெரு இருக்கும்ல ;அங்கேயும் மக்கள் இருப்பாங்கல்ல !&rsquo; கன்னலின் விளக்கம் கேட்டு விழித்தார் தாத்தா மனதுக்குள் பெருமிதம் பொங்க. &rdquo;எல்லோரும் சேர்ந்து இருந்தாத்தான் அதுக்குப் பேரு ஊரு. இல்லையா தாத்தா&ldquo; என்றாள் தென்றல். &rdquo;ஆமாங்கடா செல்வங்களே , எல்லோரும் சேர்ந்திருந்தாத் தான் ஊரு. இல்லாட்டித் தாறுமாறு &rdquo; என்று தாத்தா சொல்லி கதையை தொடரும் பேரக் குழந்தைகள் தூங்கிவிட்டிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram