தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...

29 Mar 2026, 3:34 pm
ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...
<p><strong>ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில்...&nbsp;</strong></p> <p>ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில், திமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதி மற்றும் மதிமுக ஒருதொகுதி என போட்டியிடுகிறது. &nbsp;இதன்படி, ஈரோடு மேற்கு சு.முத்துசாமி (திமுக). &nbsp;ஈரோடு மேற்குத் தொகுதி, படிப்பு:எம்.ஏ. &nbsp;கட்சிப் பதவி:1972ஆம் ஆண்டு அதிமுகவில் &nbsp;உறுப்பினராக சேர்ந்த சு.முத்துசாமி &nbsp;எம்ஜிஆர் மறைவுக்கு &nbsp;பிறகு ஜானகி அணியில் கொள்கைபரப்பு செயலாள ராக இருந்தார். ஜானகி மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணியில் இணைந்து அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக பதவி வகித்தார். &nbsp; &nbsp;2010 ஆம் ஆண்டு அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த சில நாட்களிலேயே கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஈரோடு மாவட்ட திமுக இரண்டாக பிரிக்கப் பட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வும், பின்னர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக நிய மிக்கப்பட்டார். &nbsp;அதிமுக சார்பில் 1977ஆம் ஆண்டு முதன் முதலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984 ஆகிய இரண்டு முறை ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்ஜிஆர், வி.என்.ஜானகி &nbsp;அமைச்சரவைகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இதையடுத்து 1991ஆம் ஆண்டு &nbsp;பவானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று &nbsp;ஜெயலலிதா அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். 2021 இல் ஈரோடு மேற்கு &nbsp;தொகுதியில் வெற்றிபெற்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் அமைச்சராக உள்ளார். &nbsp;இதுவரை 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதில் 4 முறை அமைச் சராக பதவி வகித்துள்ளார். 2026 தேர்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். பவானி: கே.ஏ.சந்திரசேகர் என்ற பவானி கே.ஏ.சேகர் (திமுக). கல்வித்தகுதி : டிஎஇ, எம்ஏ. 1990 ஆம் ஆண்டு &nbsp;முதல் திமுக உறுப்பினர். 2011 முதல் 2014 வரை &nbsp;ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் அணி துணை &nbsp;அமைப்பாளர், 2014 முதல் 2023 வரை ஈரோடு வடக்கு &nbsp;மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர். &nbsp;2022 முதல் பவானி வடக்கு ஒன்றிய கழக செயலாளர். அந்தியூர்: எம்.சிவபாலன் (திமுக). படிப்பு: பி.காம், டி.என்.பாளையம் ஒன்றிய கழகச் &nbsp;செயலாளர். முதல்முறையாக சட்டப்பேரவை தேர்த லில் வேட்பாளராக இவர் திமுக சார்பில் போட்டியி டுகிறார். பெருந்துறை: தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் (திமுக). கட்சிப் பதவி: 2021 ல் திமுக.,வில் இணைந்தார். தற் போது, ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் (பெருந்துறை மற்றும் பவானி சட்டப்பேரவை தொகுதி கள் உள்ளடக்கியது. 2011, 2016- ல் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர். 2012-2016 வரை வருவாய்த் துறை &nbsp;மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் &nbsp;கோபிசெட்டிபாளையம்: என்.நல்லசிவம் (திமுக). படிப்பு - டீஎம்ஈ. பட்டயப்படிப்பு. 1980ம் ஆண்டு திமுக வில் கட்சியில் இணைந்தார், 2003 முதல் 2015 வரை ஒன்றிய &nbsp;செயலாளர், 2006 முதல் 2011 வரை பவானி ஒன்றிய பெருந் தலைவர்,2015 முதல் வடக்கு மாவட்ட செயலாளர்.கோபி &nbsp;சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டையாக இருப் பதை மாற்றி திமுக கோட்டையாக மாற்றவும் செங் கோட்டையனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற &nbsp;வேண்டும் என்பதற்க்காக மாவட்ட செயலாளராக உள்ள நல்லசிவம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொடக்குறிச்சி - மதிமுக: சா.செந்தில்நாதன் கல்வித்தகுதி: பி.இ. கட்சிப் பதவி:1994 முதல் மதிமுக &nbsp;உறுப்பினர். &nbsp;இப்போது அரசியல் ஆய்வு மைய உறுப்பி னர். &nbsp;இவரது தந்தை மறைந்த பூங்கொடி சாமிநாதன் திமுக &nbsp;நகர செயலாளராகவும், மதிமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். பவானி சாகர் (தனி) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: பி.எல்.சுந்தரம் &nbsp;படிப்பு: பொதுக்கல்வி, ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், 2011 2016ம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினர், 1989ம் ஆண்டு முதல் இந்திய &nbsp;கம்யூ கட்சி ஒன்றிய செயலாளர், மாவட்ட நிர்வாகக்குழு &nbsp;உறுப்பினர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் பதவி வகித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.