பாஜக ஆளும் ம.பி.,யில் கொடூரம் கடந்த 6 ஆண்டுகளில் 52,000க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் மாயம் தினமும் 130க்கும் மேற்பட்டோர் காணாமல் போகும் அவலம்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>பாஜக ஆளும் ம.பி.,யில் கொடூரம் கடந்த 6 ஆண்டுகளில் 52,000க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் மாயம் தினமும் 130க்கும் மேற்பட்டோர் காணாமல் போகும் அவலம்</strong></p>
<p>போபால் பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநி லத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் போது, பிப்ரவரி 18 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ விக்ராந்த் பூரியா 2020 முதல் 2026 வரை மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போன புகார்கள், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த கேள்விக்கு அம்மாநில அரசு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தது. அதில்,“கடந்த 6 ஆண்டுகளில் 2,69,500 பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இதில் 2.06 லட்சத்திற்கும் அதிகமானோர் பெண்கள், 63,500 சிறுமிகள் ஆவர். இதுவரை 1.58 லட்சம் பெண்கள் மற்றும் 61,000 சிறுமிகள் மீட்கப் பட்டுள்ளனர். ஆனால் சுமார் 48,000 பெண்கள் மற்றும் 2,200 சிறுமிகளின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. இவர்களது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லாததால், இந்த வழக்கு கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தூர் முதலிடம் அதிகபட்சமாக இந்தூரில் 4,449 பெண்கள், 135 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். ஜபல்பூர் (2,296 பெண்கள், 86 சிறுமிகள்), போபால் (1,685 பெண்கள், 56 சிறுமிகள்), குவா லியர் (1,188 பெண்கள், 14 சிறுமிகள்) ஆகிய நகரங்கள் அடுத்த இடங்களில் உள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் மத்தியப்பிர தேசத்தில் தினசரி சராசரியாக 130க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. தடுக்க முடியவில்லை மேலும்,”பெண்களுக்கு எதிரான குற்றங்க ளைத் தடுக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும் 52 தனி மகளிர் காவல் நிலை யங்கள், 987 மகளிர் உதவி மையங்கள் ; ஆப ரேஷன் ஹெல்பிங் ஹேண்ட், ஸ்ரஜா, அபிமன்யு, சம்மான் போன்ற ஒருங்கிணைந்த விழிப்பு ணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2025-26 நிதியாண்டில் பெண்களின் பாது காப்பிற்காக ரூ.41,88,54,20 நிதி ஒதுக்கப் பட்டுள்ளது” என மத்தியப் பிரதேச பாஜக அரசு கூறியுள்ளது. இதையெல்லாம் செய்தும் பெண்கள், சிறுமி கள் காணாமல் மற்றும் கடத்தப்படுவதை தடுக்க முடியவில்லை என்பது தான் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசின் அவலம் என நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
