நீலகிரியில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஏடிஎம்-கள் திறப்பு
3 Dec 2025, 2:59 pm
<p><strong>நீலகிரியில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஏடிஎம்-கள் திறப்பு</strong></p>
<p>உதகை, டிச.3- நீலகிரியில் பழைய குடிநீர் ஏடி எம்-களுக்கு பதிலாக, மேம்படுத் தப்பட்ட புதிய குடிநீர் ஏடிஎம்-கள் திறக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த் தனை மூலம் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதால், நீலகிரி உயிர் சுழல் மண்டலத்திற்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியின் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் குடி நீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன் படுத்துவதற்கும், கொண்டு வருவ தற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாவட்டம் முழு வதும், 90க்கும் மேற்பட்ட இடங்க ளில் குடிநீர் ஏடிஎம்-கள் வைக்கப்பட் டன. இந்த ஏடிஎம்-களில் குடிநீர் தேவைப்படுவோர் ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நாணயங் களை செலுத்தி, குடிநீரை சேக ரித்து குடிக்கலாம். ஆனால், இவற் றில் பெரும்பாலானவை சரியாக செயல்படுவதில்லை. இதேபோல் உறைய வைக்கும் குளிர் நிலவும் உதகையில், சுடுதண்ணீர் இல்லா மல் வழக்கமான தண்ணீர் ஜில் லென்று இருப்பதால் ஏடிஎம்-யை யாரும் பயன்படுத்தவில்லை. இதையடுத்து மாற்று குடிநீர் ஏடி எம்களை அமைக்க மாவட்ட நிர் வாகம் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டது. இதனையடுத்து பிரபல குடி நீர் நிறுவனம் சார்பில், நவீன வசதி களுடன் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஏடிஎம் அமைக்க முடிவு செய்யப் பட்டு, முதற்கட்டமாக உதகை படகு இல்லத்தில் ரூ.3 லட்சம் மதிப்பி லான ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திறந்து வைத்து, ஏடிஎம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந் தார். இதன்பின் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நீலகிரி யில் ஏற்கனவே 93 குடிநீர் ஏடிஎம்- கள் உள்ள நிலையில், அவை பழ மையானதால் சுகாதாரமான குடிநீர் மற்றும் பராமரிப்பு பிரச்சனை ஏற்பட் டது. அதுகுறித்து உயர் நீதிமன்றத் தில் எடுத்துரைக்கப்பட்டு, 38 ஏடி எம்-கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப் பட்டுள்ளது. அதற்கு பதிலாக மேம் படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய வாட்டர் ஏடிஎம்-களை தனி யார் நிறுவனங்களில் நிதி உதவி யுடன் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தற்போது வைக்கப்பட்டுள்ள இந்த ஏடிஎம்-களில் குளிர்ச்சியான மற்றும் வெந்நீர் என இரண்டு வகை யான குடிநீர் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்க மகளிர் சுய உத விக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள் ளன. இதன் மூலம் மகளிர்களுக் கும் வாழ்வாதாரம் மேம்படும்; இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டா லும் சம்பந்தப்பட்ட நிறுவனமே சரி செய்யவும் வாரம் தோறும் கண் காணித்து நடவடிக்கை எடுக்கப் படும். இதற்கு முன்பு அமைக்கப் பட்டிருந்த குடிநீர் ஏடிஎம்களில் 5, 10 ரூபாய் நாணயங்கள் செலுத்தி தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். இந்த புதிய ஏடிஎம்-களில் கியூஆர் ஸ்கேன் மூலம் கட்டணத்தை செலுத்தி தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம், என்றார்.</p>
<p> </p>
