‘கருத்துத் திணிப்பு’களும்... கலகலக்கும் கூட்டணியும்!
16 Mar 2026, 4:46 pm
<p><strong>‘கருத்துத் திணிப்பு’களும்... கலகலக்கும் கூட்டணியும்!</strong></p>
<p>“பாஜகவின் குறுக்கு வழி அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. தேர்தல் நேரத்தில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட ‘கருத்துத் திணிப்புகள்’ தான்” என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியின் சுருக்கம் அடகு வைத்த எடப்பாடி : பீகாரில் நீண்டகாலம் முதல்வராக இருந்த நிதிஷ்குமாரையே வீட்டுக்கு அனுப்பியவர்கள் பாஜகவினர். அப்படி இருக்கையில், பாஜகவின் பிடியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. மாநில உரிமைகளை அடகு வைத்து விட்டு, எடப்பாடி எதற்கு முதல்வர் நாற்காலியைப் பற்றிப் பேசவேண்டும்? கொல்லைப்புற அரசியல்: சிபிஐ மிரட்டல் மூலம் கட்சிகளை வளைப்பதும், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பதும் பாஜகவின் வாடிக்கை. ஆனால், நேர்வழியில் வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் இவர்களின் எந்த மிரட்டலும் எடுபடாது. மக்களின் வயிறு எரிகிறது: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு மோடி அரசே முழுப் பொறுப்பு. வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்தே காலத்தைக் கடத்தும் மோடி, உள்நாட்டில் மக்களை வஞ்சிக்கிறார். தோல்வி உறுதி: 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமன்றி, 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி. டெல்லிக்கு ‘அடிமை’யாக இருப்பவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.</p>
