தொழில்நுட்ப கதிர்
5 Dec 2025, 4:21 pm

ஐஓஎஸ் 18 பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனம், தற்போது ஐஓஎஸ் 18 வெர்ஷனை பயன்படுத்தும் ஐபோன் பயனர்களை, ஐஓஎஸ் 26.1 வெர்ஷனுக்கு மேம்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பரில் ஐஓஎஸ் 26.1 மற்றும் 18.7 வெளியானது. அப்போதிலிருந்து, Software Update பக்கத்தின் கீழே ஒரு விருப்ப மேம்படுத்தலாக, ஐஓஎஸ் 26.1 and ஐஓஎஸ் 18.7.2 அப்டேட்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன. அப்டேட் செய்வது எப்படி: 1) Settings > General > Software Update ஆகியவற்றுக்கு சென்றால் ஐஓஎஸ் 26.1 காண்பிக்கும். 2) அதனை Download செய்து, இன்ஸ்டால் செய்தால் அப்டேட் ஆகிவிடும். ஐஓஎஸ் 26.1-இல் இருக்கும் புதிய அம்சங்கள்: • Liquid Glass customization: திரை (UI) வெளிப்படைத்தன்மையை (translucency) பயனர் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம். • பாதுகாப்பு மேம்பாடுகள்: iPhone மற்றும் iPad-க்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. • செயல்திறன் உயர்வு: Apps மற்றும் UI வேகமாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. • புதிய Display & Brightness விருப்பங்கள்: Clear look அல்லது Tinted look ஆகியவற்றை தேர்வு செய்யலாம். இந்த ஐஓஎஸ் 26.1 அப்டேட், ஐபோன் SE மற்றும் ஐபோன் 11, 12, 13, 14, 15, 16, 17 Series ஐபோன் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் Missed கால்களுக்கு வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோனில் உள்ள வாய்ஸ் மெயில் (Voice mail) அம்சம் போல, வாட்ஸ் அப் பயனர்கள், தங்கள் நண்பர்களுக்கு வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பு செய்யும் போது, அவர்கள் பதிலளிக்காத பட்சத்தில் உடனடியாக ஒரு “Record voice message / Voice note” அனுப்பும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களுக்கு வாய்ஸ் அல்லது வீடியோ மெசேஜுடன் இணைந்து, Missed call-க்கான Notification-னும் அனுப்பப்படுகின்றது. இது மட்டுமன்றி, அழைப்புகளை Schedule செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது ஐஓஎஸ் பயனர்கள் (recent update) மற்றும் சில ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு ஒருங்கிணைந்த உதவி மையம் அறிமுகம்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு ஒரே இடத்தில் உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த உதவி மையத்தை (Unified Support Hub) மெட்டா நிறுவனம் (தாய் நிறுவனம்) உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏஐ வசதியுடன் கூடிய இந்த புதிய உதவி மையத்தில், பயனர்களின் கேள்விகளுக்கு தானியங்கி (Automatic) பதில்கள் வழங்கப்படும். இதில் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் கணக்கின் அமைப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவாக பெற முடியும். பயனர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் அல்லது வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உதவி மையம் வழியாக விரைவாக தீர்வு காணலாம். இதில் உள்ள ஏஐ மாடல், login விவரங்களை மதிப்பீடு செய்ய, சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிய மற்றும் பிஷிங் முயற்சிகளை நிகழ்நேரத்தில் தடுக்க, பயனரின் கணக்கு தற்செயலாக முடக்கப்படுவதைத் தவிர்க்க, ஏஐ உதவியுடன் கணக்குகள் தொடர்பான மேல்முறையீட்டு செயல்முறை விரைவாக மேற்கொள்ள உதவும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.