தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

4 Jan 2026, 4:05 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஓய்வூதியத் திட்டத்தை  செயல்படுத்துவது சாத்தியமே!

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின்  நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே என்று அவர் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 21 முதல் 22 சதவீதம் ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக, அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும்” என ப.சிதம்பரம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி கடத்தல்  அமெரிக்காவை கண்டித்து ஜன. 6 சென்னையில் தூதரக முற்றுகை

சென்னை: வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது  மனைவியைக் கடத்திச் சென்றுள்ள அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் காட்டு மிராண்டித்தனமான செயலைக் கண்டித்து, ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெ ரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து அந்த அமைப்புகளின் மாநிலக் குழுக்கள் விடு

த்துள்ள அறிக்கையில், “சர்வதேச சட்டங்களையும், ஒரு  நாட்டின் இறையாண்மையையும் காலில் போட்டு மிதிக்கும்  வகையில் அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியுள்ளது. எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்காகப் பொய்ப் பிரச்சா ரங்களை மேற்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கடத்தியுள்ள அமெரிக்காவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அமெரிக்கா வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அத்துமீறலைக் கண்டித்து ஜனவரி 6 அன்று சென்னையில் அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்ட மும், இதர மாவட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேரணி களும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மூத்த தலைவர்  எல்.கணேசன் காலமானார்

தஞ்சாவூர்: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) வயது முதிர்வு காரணமாக தஞ்சாவூரில் காலமானார். அவருக்கு வயது  92. தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயி றன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட  அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நிலை  சீராக உள்ளது

சென்னை: பாரதி ராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வா கம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. மூச்சுவிடு வதில் பிரச்சனை கார ணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாரதிராஜா அனுமதிக்க ப்பட்டுள்ளார். தொ டர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வருகிறது. விலங்குகளின்  டிஎன்ஏ மாதிரிகள் சேமிப்பு

சென்னை: வனப் பகுதிகளில் சந்தே கத்துக்குரிய வகையில் இறக்கும் யானை, புலி,  சிறுத்தை போன்ற விலங் குகளின் டிஎன்ஏ மாதி ரிகள் ஆய்வுக்காக சேமித்து வைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித் துள்ளது. வன விலங்கு களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும்  போது, கட்டாயம் வீடி யோ பதிவு செய்ய வேண் டும் என அனைத்து வனத்துறை அதி காரிகளுக்கும் சுற்ற றிக்கை அனுப்பியுள்ள தாகவும் வனத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு கேரள கடலோரப் பகுதி களை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும்  அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு  வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவு கிறது. இதனால் ஜன.5,  6 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளிலும் லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதி காலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்  என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.