முந்தய பக்கம்

அடிமைத்தன சட்டத்தொகுப்பு அமலாக்கம்: சிஐடியு ஆர்ப்பாட்டம்

23 Nov 2025, 6:20 pm
அடிமைத்தன சட்டத்தொகுப்பு அமலாக்கம்: சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p><strong>அடிமைத்தன சட்டத்தொகுப்பு அமலாக்கம்: சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, நவ.23- ஒன்றிய மோடி அரசு, தொழிலாள ருக்கு விரோதமாக திருத்தப்பட்ட நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை ஒன்றிய மோடி அரசு &nbsp;திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி சனியன்று இந்திய தொழிற்சங்க &nbsp;மையத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் &nbsp;அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் சி.கலாவதி தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் சி.நாக ராசன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், ஆறுமுகம், அங்கம்மாள், கவிதா, ஏ. சேகர், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். &nbsp;இதேபோன்று, திருப்பூர் மாவட் டம், பல்லகவுண் டன்பாளையத்தில் இயங்கி வரும் சக்தி ஆட்டோ காம்போனென்ட் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு &nbsp;இன்ஜினியரிங் சங்க துணைச்செயலா ளர் ஆர்.சிவராஜ் தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.கண்ணையன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் கே.குமார் உட்பட பலர் கலந்து &nbsp;கொண்டனர். முடிவில், இன்ஜினிய ரிங் சங்க பொருளாளர் எஸ்.கே.சந்திர மூர்த்தி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram