உயர்கல்வி நிலையங்களில் சமத்துவத்திற்கான யுஜிசி சமத்துவ விதிகளை அமல்படுத்துக! சென்னை கருத்தரங்கம் வலியுறுத்தல்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>உயர்கல்வி நிலையங்களில் சமத்துவத்திற்கான யுஜிசி சமத்துவ விதிகளை அமல்படுத்துக! சென்னை கருத்தரங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p><strong></strong>சென்னை, பிப். 24 - யுஜிசி வகுத்துள்ள உயர் கல்வி நிலையங்களில் சமத்துவத்திற்கான விதி களை அமல்படுத்த வேண்டு மென்று செவ்வாயன்று (பிப். 24) சென்னையில் நடை பெற்ற கருத்தரங்கு வலி யுறுத்தி உள்ளது. உயர்கல்வி நிலை யங்களில் சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில பல்கலைக் கழக மானியக் ்குழு (யுஜிசி) சமத்துவ விதிகள்-2026ஐ வெளி யிட்டது. இதனை எதிர்த்து சாதி ஆதிக்கமிக்கவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் விதிமுறைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமத்துவ விதி களை நிறுத்தி வைத்துள் ளது. உச்சநீதிமன்ற தடையை நீக்கி சமத்துவ விதிமுறை கள்-2026ஐ அமல்படுத்த வேண்டும்; ரோகித் வெமுலா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலி யுறுத்தி செவ்வாயன்று (பிப். 24) சென்னையில் கருத்த ரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ்விற்கு மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் சி.மிருதுளா தலைமை தாங்கினார். தமுஎகச துணைப் பொதுச் செயலா ளர் கி.அன்பரசன் வரவேற் றார். தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ் துவக்க வுரையாற்றினார். கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தமுஎகச மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். கிரி ராஜன் எம்.பி., வாழ்த்தி பேசி னார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி., நிறைவுரை யாற்றினார். தீர்மானத்தை தேவன் வாசித்தார். மாணவர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச.ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்வுகளை முன்னணியின் மாநிலச் செயலாளர் ச.லெனின், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் வ.அசோக்சிங் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.</p>
