ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்திடுக! மதுரையில் 4 வது நாளாக மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
3 Mar 2026, 3:38 pm
<p><strong>ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்திடுக! மதுரையில் 4 வது நாளாக மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>மதுரை, மார்ச் 3- மின்வாரியத்தில் பணிபுரியும் பொறி யாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்தக் கோரி, அனைத்து மின்வாரிய தொழிற் சங்கக் கூட்டுக்குழு சார்பில் மதுரை மண்ட லத் தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 4 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் கழகத்தைச் சேர்ந்த என்.கண்ணன் தலைமை வகித்தார். பொறியாளர் யூனியன் கிளைச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பணியாளர் பெட ரேஷன் சார்பில் டேவிட் பொன்னையா, எம்ஏபிபிஎஸ் முன்னாள் செயலாளர் பால கிருஷ்ணன், பொறியாளர் கழகத்தைச் சேர்ந்த சுதன், அம்பேத்கர் சங்கத்தைச் சேர்ந்த கணபதி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மதுரை மாநகர் செயலா ளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இன்ஜினியரிங் யூனியன் சார்பில் திருப்பதி, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஆர்.சுரேஷ்குமார், ஐக்கிய சங்கத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இமானு வேல், பணியாளர் பெடரேஷன் ராஜாங்கம், டிஎன்பிஇஒ அமைப்பைச் சேர்ந்த மாரி முத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வா கிகள் பிரபுகுமார், தனபாண்டி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
