பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! ஓய்வூதியர் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! ஓய்வூதியர் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கும்பகோணம், நவ.12 - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். தேர்தல் வாக்குறுதி யில் தெரிவித்தபடி 70 வயதான ஓய்வூதியர் களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத் துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்ட கிளை சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கும்ப கோணம் வட்ட துணைத் தலைவர் தங்க.வளவப்பன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கண்ணாமணி வரவேற்றார். வட்டச் செயலாளர் பக்கிரிசாமி மற்றும் சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் ம.கண்ணன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.கண்ணன், மகளிர் அணி கலைச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜ கோபாலன் நிறைவுரை ஆற்றினார். வட்டப் பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் கே.ஏ. தங்கராசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கணே.மாரிமுத்து, வட்ட துணைச் செயலாளர் அ.கா.தங்கராசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வட்டத் துணைத் தலைவர் பி.கணேசன் வரவேற்றார். வட்டச் செயலாளர் த.கண்ணப்பன் துவக்க உரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் க.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வட்ட துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சி. பிச்சைமுத்து நன்றி கூறினார். கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் வட்டத் தலைவர் எம்.துரைக்கண்ணு தலைமை வகித் தார். மண்மங்கலம் வட்டச் செயலாளர் எஸ். மாலதி வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எம்.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்ப ழகன், மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் து. சாமு வேல் சுந்தரபாண்டியன், மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி நலச்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கா. காத்தமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் அ. ஜெயவேல் நன்றி கூறினார். புதுக்கோட்டை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க புதுக் கோட்டை வட்டத் தலைவர் தே.தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் இரா.ராஜேந்திரசிங் தொடக்க உரையாற் றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் மு.முத்தையா, செயலாளர் என்.ராமச் சந்திரன், வட்டச் செயலாளர் எம்.தேவதாஸ் உள்ளிட்டோர் பேசினர். மாநிலச் செயலாளர் வ.பழனிவேலு நிறைவுரையாற்றினார். முன்ன தாக தி.நடராஜன் வரவேற்க, பி.இராமன் நன்றி கூறினார். திருவாரூர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பநாதன் தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.பிரேமா, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மகேஷ், அரசு ஊழி யர் சங்கத்தின் வட்டத்தலைவர் வி.நடராஜன், அமைப்பின் வட்ட செயலாளர் ஏ.சண்முகம் மற்றும் துறைவாரி சங்கத்தினர் கோரிக்கை களை வலியுறுத்தி உரையாற்றினர். நாகப்பட்டினம் சங்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத் தலை வர் கா.இராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட இணைச் செயலாளர் எஸ்.மணியன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.வேலாயுதம் துவக்க வுரையாற்றினார். வடட்டச் செயலாளர் வி.மாரி முத்து விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த. ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். வட்டப் பொரு ளாளர் என்.பாபுராஜ் நன்றி கூறினார்.</p>
