பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திடுக அரசு ஊழியர் சங்கம் டிச.4-ம் தேதி சேலத்தில் மறியல்
29 Nov 2025, 4:58 pm
<p><strong>பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திடுக அரசு ஊழியர் சங்கம் டிச.4-ம் தேதி சேலத்தில் மறியல்</strong></p>
<p>சேலம், நவ.29- பழைய பென்ஷன் திட் டத்தை அமல்படுத்த வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் டிச.4 ஆம் தேதி சேலம் கோட்டை மை தானத்தில் மாபெரும் மறி யல் போராட்டம் நடைபெறும் என அனைத்து துறை ஊழியர் சங்க போராட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்க போராட்டக்குழு கூட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள தமிழ் சங்க அண்ணா நூலக மேல்மாடியில் சனியன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ந.திருவே ரங்கன் தலைமை வகித்தார். இதில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக் கான காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண் டும். ஏழாவது ஊதியக்குழுவில் நிதி பலன் களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஊழியர்களுக்கும் ஆசிரியர்க ளுக்கும் வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண் டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் டிசம்பர் 4 ஆம் தேதியன்று சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் சண்முகம், வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் வெ. அர்த்தநாரி, அனைத்து துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
