தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திடுக

11 Nov 2025, 3:41 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திடுக
<p><strong>பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திடுக</strong></p> <p>கோவை, நவ.11- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் ஓய்வூதிய மதிப்பீட்டு சட்ட நடைமுறைகளை ரத்து செய்திட வேண்டும். பழைய &nbsp;ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத் திட வேண்டும். ஓய்வு பெற்ற சத்து ணவு அங்கன்வாடி ஊழியர்கள், &nbsp;வருவாய் கிராம ஊழியர்கள் போன் றோருக்கும் குறைந்த பட்ச ஓய் வூதியம் ரூ. 7850 ஐ வழங்க வேண் டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூ தியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் &nbsp;ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் &nbsp;ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக சேலம் &nbsp;கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு &nbsp;அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் கள் சங்க மாநகர வட்டக்கிளை தலை வர் எம். ராஜா தலைமை வகித்தார். &nbsp;ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கோரிக்கை களை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் பி. கோவிந்தசாமி பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் சுரேஷ் வாழ்த் திப் பேசினார். சங்கத்தின் மாவட்டத் &nbsp;தலைவர் ஆர். அருள்மொழி ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து வைத் தார். இதில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். கோவை கோவை வடக்கு, தெற்கு வட் டக்கிளைகள் சார்பில் தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் முன்பும், &nbsp;பொள்ளாச்சி வட்டக்கிளை சார் பில் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில், ஓய்வு பெற்ற ஐஆர் எஸ் அதிகாரி ஜெகநாதன், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ச.ஜெகநாதன், ஓய்வூ தியர் சங்கத்தின் தலைவர்கள் அரங் கநாதன், எஸ்.மதன், அருணகிரிநா தன் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலை வர் ஏ. மணி தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் கே. புக ழேந்தி, வட்டச் செயலாளர் என். &nbsp;முருகமாணிக்கம், வட்டப் பொரு ளாளர் எம். பாபு, மின்வாரிய ஓய்வூ தியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். அரசு ஊழியர் சங்க வட்டத் &nbsp;தலைவர் மீன் முருகன் வாழ்த்திப் பேசினார். இதில், ஏராளமானோர் &nbsp;கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், கூடலூர் வட் டக் கிளை சார்பாக சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலைவர் ஜி. வர்கீஸ் தலை மை வகித்தார். இதில், வட்டக்கிளை &nbsp;செயலாளர் விஸ்ணுதாசன் கோரிக் கைகளை விளக்கப் பேசினார். மின் வாரியத் தலைவர் கேட்பெரே மேத்யூ, போக்குவரத்து துறை செய லாளர் ராதாகிருஷ்ணன், தபால் துறை பொறுப்பாளர் முத்துசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சிவபெருமாள் ஆகியோர் &nbsp;வாழ்த்திப் பேசினர். ஓய்வூதியர் &nbsp;சங்க முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில், வட்டக் கிளை துணைத் தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறி னார். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலக &nbsp;வளாகத்தில் நடைபெற்ற தர்ணா விற்கு, அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் வ. பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். துணைத் தலைவர் இரா.சீனி வாசன் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.சங்கரன் துவக்க வுரையாற்றினார். இணை செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசி னார். அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் நிறைவுரையாற்றினார். மாவட்டப் &nbsp;பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணி யன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.