முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளின் 2014 சட்டத்தை முழுமையாக அமல்படுத்துக

20 minutes before
சாலையோர வியாபாரிகளின் 2014 சட்டத்தை முழுமையாக அமல்படுத்துக

சாலையோர வியாபாரிகளின் 2014 சட்டத்தை முழுமையாக அமல்படுத்துக

சென்னை, நவ.15-சென்னை மாவட்ட சாலையோர சிறுகடைவிற்பனையாளர்கள் சங்கத்தின் மாதவரம் செங்குன்றம் பகுதி முதலாம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (நவ. 15)தலைவர் கே.சி.ஏ.கருத்திருமன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர்வி.குப்புசாமி, சிபிஎம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.மாவட்ட செயலாளர் டி.வெங்கட் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக பி.ராஜன் வரவேற்றார்.கே.லட்சுமணன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

அதிகாரிகள், காவல்துறையினரின் கெடுபிடிகளை தடுக்க வேண்டும், முறையான அறிவிப்பு இன்றி கடைகளை அகற்றக் கூடாது, வியாபாரம் செய்யும்இடங்களில் குடிநீர், பொது கழிப்பிட வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்த வேண்டும், அடையாள அட்டைஇல்லாதவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டையை வழங்க வேண்டும், வங்கி மூலம் கடனுதவி வழங்கவேண்டும், சாலையோர வியாபாரிகளின் 2014 சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வுசெயல் தலைவராக வி.கமலநாதன்,தலைவராக என்.பாலன், செயலாளராக கே.சி.ஏ.கருத்திருமன், பொருளாளராக பி.ராஜன் உள்ளிட்ட 11 நிர்வாகிகள்தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram