முந்தய பக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக

22 Jul 2026, 11:02 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக
<p><strong>பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக</strong></p><p>ஈரோடு, ஜூலை 22- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்ப டுத்த வேண்டும் என ஓய்வூ தியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு பெரியார் மன்றத்தில் புதனன்று நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். ஓய்வூ தியர் சங்க தலைவர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். எப்சிபிஏ மாநில ஒருங்கிணைப் பாளர் ஆர்.ராஜசேகர் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். இதில், புதிய ஓய்வூதியத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும்; 8- ஆவது ஊதியக் குழு வரம்பில் ஓய்வூதிய மாற்றத்தைச் சேர்க்க வேண்டும்; கரோனா காலத்தில் முடக்கப்பட்ட பஞ்சப்படி தவணை களை வழங்க வேண்டும்; ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் போன்று சிவில் ஓய்வூதியர்க ளுக்கும் ஓய்வூதிய சமத்துவம் வழங்க வேண் டும். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் போராடும் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைவராக கே.குப்புசாமி, செயலாளராக சி. பரமசிவம், பொருளாளராக என்.ராமசாமி மற் றும் 10 உதவித்தலைவர்கள், 8 துணைச்செய லாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி யாக சி.பரமசிவம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram