தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏகாதிபத்தியமும் செயற்கை நுண்ணறிவும்: யாருக்காக இந்த தொழில்நுட்பம்? - கே.சி.கோபிகுமார்

6 Oct 2026, 9:13 pm
ஏகாதிபத்தியமும் செயற்கை நுண்ணறிவும்: யாருக்காக இந்த தொழில்நுட்பம்? - கே.சி.கோபிகுமார்

ஏகாதிபத்தியமும் செயற்கை நுண்ணறிவும்: யாருக்காக இந்த தொழில்நுட்பம்? - கே.சி.கோபிகுமார்

மிகப்பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல், சமூகத் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்துள்ளது.

பிக் டெக்கும் நிதி மூலதனமும் இணைந்த ஆட்சி

அமெரிக்காவில் அரசு, ‘பிக் டெக்’ எனப்படும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி மூலதனத்தின் சங்கமத்தைக் காண்கிறோம். செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்குத் தேவையான அதிக மூலதனத்தால், வேன்கார்ட், பிளாக்ராக், பிடிலிட்டி போன்ற உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும் வால் ஸ்ட்ரீட்டும், மைக்ரோசாஃப்ட், ஆல்பபேட், மெட்டா, அமேசான், நிவிடியா போன்ற ‘பிக் டெக்’ நிறுவனங்களில் கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் தரவு மையங்களுக்குத் தேவையான நிலம், ஆற்றல், நீர் வளங்களுக்கு ஆதரவாக அரசு வரிப்பணத்தையும் வரிச் சலுகைகளையும் பயன்படுத்துகிறது; தனது இராணுவம், உளவுத்துறை செயல்பாடுகளுக்கும் அரசு இவற்றை அதிகம் சார்ந்துள்ளது. இதனால் ‘பிக் டெக்’, நிதி மூலதனம், அரசு ஆகியவை ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக மாறி, நிதி மூலதனமே அதற்குத் தலைமை வகிக்கிறது.

நிதி மூலதனம் வரிக் கட்டணங்களை உயர்த்தவும், தொழிலாளர் செலவுகளைக் குறைக்கவும், அதிக வாடகை வசூலிக்கவும் அழுத்தம் தருகிறது; போட்டியாளர்களை நசுக்கவும் பாதுகாப்புச் சட்டங்களில் மென்மையாக நடக்கவும் இயைந்த முறையில் அரசின் கொள்கைகளை வகுக்க ஆணையிடுகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு பொது நன்மையாகவோ மனித முன்னேற்றத்திற்கான கருவியாகவோ அல்ல, பெருநிறுவன அதிகாரத்தைக் குவிப்பதற்கும் உழைக்கும் மக்கள் மீதான அரசின் பிடியை இறுக்குவதற்குமே வடிவமைக்கப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகால மனித ஒத்துழைப்பால் உருவான திறந்த இணையத்தை, இன்று கட்டணத் தடைகள், வரிகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக் கட்டணங்கள் மூலம் பொதுமக்களுக்கே மீண்டும் விற்கும் தனியுரிமைத் தரவுகளாக மாற்றியுள்ளன. தங்கள் வரவைத் தக்கவைக்க, செயற்கை நுண்ணறிவு ஒரு தடுக்க முடியாத சர்வ வல்லமை சக்தி என்ற மாயையை இந்நிறுவனங்களே ஊக்குவிக்கின்றன.

தரவு மையங்கள்: புதிய காலனித்துவ விரிவாக்கம்

இந்த தரவு மையங்கள் பிரம்மாண்டமான சூப்பர் கம்ப்யூட்டர்கள்; அதிக சிறப்பு சிப்களுடன் தொடர்ந்து இயங்கி, பெரும் நிலம், மின்சாரம், நீரைப் பயன்படுத்தி அருகிலுள்ள மக்களுக்கு அவற்றைக் குறைக்கின்றன; இரைச்சல் மாசும் சேர்கிறது. இவை வேலைவாய்ப்பை அதிகரிப்பதே இல்லை. 2030-க்குள் நூற்றுக்கணக்கான புதிய தரவு மையங்கள் தேவைப்படும் என்பதால், மலிவான வளங்கள், குறைந்த சட்டக் கட்டுப்பாடு, பலவீனமான தரவு தனியுரிமைச் சட்டங்கள் கொண்ட ஆசிய நாடுகளுக்கு பெரு நிறுவனங்கள் விரிவடைகின்றன — இது ஒரு புதிய காலனித்துவ விரிவாக்கமே.

இதற்கு எடுத்துக்காட்டு, விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் அதானி குழுமத்துடன் இணைந்து ஏப்ரல் 2026-இல் தொடங்கிய செயற்கை நுண்ணறிவு தரவு மையம். தெற்கு உலக பிராந்தியத்திலேயே மிகப்பெரியதும், அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரியதுமான இந்த மையம் 601.4 ஏக்கரில் அமைந்துள்ளது; அதன் தினசரி மின் தேவை ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த மின் நுகர்விற்கு இணையானது. ஏற்கெனவே 70 மில்லியன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை உள்ள விசாகப்பட்டினத்தில், இந்த மையம் நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் வரை நீரை நுகரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கம்பளகொண்டா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், உள்ளூர் மக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை இது சந்தித்து வருகிறது.

முதலாளிகளின் கட்டுப்பாட்டில் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகச் சித்தரிக்கப்படுகிறது; இத்தகைய பேரழிவு சித்தரிப்புகள் பெரும்பாலும் அதில் முதலீடு செய்த நிறுவனங்களிடமிருந்தே வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியை உழைப்புப் பிரிவினையால் இயக்கப்படும் செயல்முறையாகமார்க்ஸ் கண்டார்; இயந்திரங்கள் தனி விஞ்ஞானி களின் மூளையிலிருந்து அல்ல, கூட்டு உழைப்பிலிருந்தே உருவாகின்றன,தொழிலாளர்களின் அறிவும் திறனும் அவற்றில் உட்பொதிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவும் அவ்வாறே உழைப்பு,சமூக உறவுகளின் நுண்ணறிவால் வடிவமைக்கப்படுகிறது; தொழில்நுட்பம் நடுநிலையானதல்ல, அது உருவாகும்பொருளாதார அமைப்பால் வடிவமைக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் தொழில்நுட்பம் உற்பத்தித்திறனின்உந்துசக்தி யாக மாறும் அதே வேளையில் சுரண்டலையும் உழைப்பாளியின் அந்நியப்படுத்தலையும் தீவிரப்படுத்துகிறது.சோசலிசத்தின் கீழ் மட்டுமே தொழில்நுட்பம் சமூகத் தேவைகளையும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும்மேம்படுத்தும் பொது நன்மையாக மாற முடியும்.

இரண்டு மாதிரிகள்: முதலாளித்துவம் எதிர் சோசலிசம்

அமெரிக்க சிப் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட சீனா, திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி, இத்துறை யின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இலவச மாகக் கிடைக்கும், அமெரிக்கப் பதிப்புகளுக்கு இணையான இந்த மாதிரிகளை உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செம்மைப்படுத்துகின்றனர்; இந்த கூட்டு முயற்சி எந்த தனி நிறுவனத்தையும் விட வேகமாக முன்னேறுகிறது. OpenAI, Anthropic போன்ற தனியுரிமை மாதிரிகள், மலிவான சீனத் திறந்த மூலமாதிரிகளால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கின்றன.அமெரிக்காவில் போட்டியிடும் பெரு நிறுவனங்கள், உள்ளூர் மக்களைப் பற்றி கவலைப்படாமல் மலிவான நிலம், மின்சாரம், வரிச் சலுகை கிடைக்குமிடங்களில் தரவு மையங்களை அமைக்கின்றன. சீனாவோ, செயற்கை நுண்ணறிவை ஒரு கூட்டுறவு பொதுப்பயன்பாட்டு வளமாக உருவாக்கி, தரவு மையங்

களை ஆற்றல் வளம் மிக்க, மக்கள் அடர்த்தி குறைந்த பகுதிகளில் அமைக்கிறது. அமெரிக்கா வில் ஏகபோக லாபத் தேடலே இதை இயக்குகிறது; சீனாவில் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமே முதன்மை — இதன் மூலம் சர்வதேசஅங்கீகாரமும் பெறுகிறது. அனைத்து கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்குச் சொந்த மானவை; அவை தனி சொத்தல்ல.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.