தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போரின் விலையாய் வளரும் நாடுகள்...! - பேராசிரியர் விஜய் பிரசாத்

28 Jun 2026, 10:10 pm
போரின் விலையாய் வளரும் நாடுகள்...! - பேராசிரியர் விஜய் பிரசாத்

போரின் விலையாய் வளரும் நாடுகள்...! - பேராசிரியர் விஜய் பிரசாத்

ஈரானுக்கு எதிராக அமெ ரிக்கா முன்னெடுக்கும் போர்த் தாக்குதல்கள், நேரடி யாக ஈரானிய மக்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்குவது ஒருபுற மிருக்க, மறுபுறம் ‘உலக தெற்கு’ (Global South) என்று அழைக்கப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் மக்களை அதைவிட மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. செனகல் தலைநகர் டாக்கர் முதல் வங்கதேசத்தின் டாக்கா வரை, பிஜியின் சுவா முதல் மொசாம்பிக்கின் மாபுடோ வரை, இந்தப் போரின் உட னடிப் பாதிப்பு என்பது ராணுவம் சார்ந்தது அல்ல; அது முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. இப்போரின் விலையை வாஷிங்டனோ அல்லது வட அட்லாண்டிக் நிதி மையங்களோ சுமப்பதில்லை; மாறாக, வளர்ந்து வரும் ஏழை நாடுகளின் சாமானிய மக்களே தங்களின் அன்றாட வாழ்வில் சுமக்கிறார்கள்.

உலகப் பொருளாதாரச் சமத்துவமின்மையும் ஹோர்முஸ் நீரிணை அதிர்ச்சியும்

இன்றைய உலகப் பொருளாதாரம் ஆழமான சமத்துவமின்மையின் அடித்தளத்தில் கட்டமைக்கப் பட்டுள்ளது. ‘உலக வடக்கு’ (Global North) நாடுகள் தங்களிடம் கூடுதல் நிதிப் பாதுகாப்பு ஏற்பாடுகள், நெருக்கடியை எதிர்கொள்வதற்கான கையிருப்புகள் மற்றும் உலகளாவிய நாணய ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. பெட்ரோலியத் தேவையைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வடக்குக் கடல், அமெரிக்கா - கனடாவின் ஷேல் எண்ணெய், பிரேசிலின் கடல்சார் எண்ணெய் வயல்கள் மற்றும் வெனிசுலா வின் வளங்கள் எனப் பரவலான அணுகல் வசதிகள் உள்ளன. ஆனால், உலக தெற்கு நாடுகளுக்கு இத்தகைய பாதுகாப்புகள் எதுவும் கிடையாது. எனவே, புவிசார் அரசியல் மோதல்கள் ஆற்றல் சந்தையை உலுக்கும்போது, அதன் முதல் மற்றும் கடுமையான பாதிப்பு இந்த வளரும் நாடுகள் மீதே விழுகிறது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு (UNCTAD) தனது சமீபத்திய மதிப்பீட்டில் தெளிவாக விளக்கியுள்ளது. உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் மிக முக்கியமான வழித்தடங்களில் ஒன்று ஹோர்முஸ் நீரிணை ஆகும். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த மிகக் குறுகிய கடல் பகுதி வழியாகவே நடைபெறுகிறது. இதில் ஏற்படும் சிறு இடையூறும் உலகளாவிய எரிபொருள் விலையையும், கப்பல் போக்குவரத்துச் செலவையும் உடனடியாகக் கிடுகிடுவென உயர்த்தும்.

ஏழை நாடுகள் மீதான கூடுதல் சுமை

ஐநா வர்த்தக அறிக்கையின்படி, மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவு நாடுகள் உள்ளிட்ட உலகின் மிகவும் பலவீனமான 75 நாடுகள் பொருளாதாரங்களில், 65 நாடுகள் முற்றிலும் இறக்குமதி எண்ணெய்யையே நம்பியுள்ளன. இந்நாடு களில் வாழும் சுமார் 100 கோடி மக்களுக்கு, இந்த எண்ணெய் விலை உயர்வு என்பது வெறும் சந்தை ஏற்றத்தாழ்வு அல்ல; மாறாக, அது அவர்களின் வாழ்வா சாவா போராட்டம். எரிபொருளுக்காகக் கூடுதல் நிதி செலவிடப்படும்போது, சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி மற்றும் உணவு மானியம் போன்ற பொதுச் சேவை களுக்கான அரசு நிதி முற்றிலுமாக முடக்கப்படுகிறது. புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. எண்ணெய் விலை 50 சதவீதம் உயர்ந்தால், இந்த ஏழை நாடுகளின் வருடாந்திர இறக்குமதிச் செலவு 20.4 பில்லியன் டாலர் (சுமார் ₹1,70,000 கோடி) அதி கரிக்கும். இதில் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டும் 16.1 பில்லியன் டாலர் கூடுதல் சுமையை சுமக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றின் நீடித்த பாதிப்புகள், உலகளாவிய வட்டி விகித உயர்வு, உக்ரைன் போரின் விளைவுகள் ஆகியவற்றால் ஏற்கனவே கடனில் மூழ்கி, அரசின் செலவுக் கட்டுப் பாட்டுத் திட்டங்களுக்குள் சிக்கியுள்ள ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்த ‘எண்ணெய் அதிர்ச்சி’ மீள முடியாத பேரழிவை ஏற்படுத்தும்.

சங்கிலித் தொடர் விளைவுகளும் மக்களின் அவதியும்

எண்ணெய் என்பது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளோடும் பிணைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயரும்போது போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலையும் உயர்கிறது. நவீன விவசாயம் பெட்ரோ கெமிக்கல் உள்ளீடுகளையும் உரங்களையும் பெரிதும் சார்ந்துள்ளதால், உற்பத்திச் செலவு பன்மடங்கு கூடுகிறது. மின்சார உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் பணவீக்கம் வேகமாகப் பரவுகிறது. இதன் விளைவாக, தொழிலாளர்களின் ஊதி யங்கள் தேங்கி நிற்க, வாழ்க்கைச் செலவுகள் மட்டும் விண்ணைத் தொடுகின்றன. நிலைமையைச் சமாளிக்க அரசுகள் தங்களின் நீண்டகால உள்கட்ட மைப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை ரத்து செய்கின்றன. இதன் பின்னணியில் உள்ள பெரும் முரண்பாடு என்னவென்றால், இந்த நெருக்கடிக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத பசிபிக் தீவுகளோ அல்லது ஆப்பிரிக்க நாடுகளோதான் இதன் உச்சக்கட்ட விலையைக் கொடுக்கின்றன. வாஷிங்ட னிலோ அல்லது டெல் அவிவிலோ எடுக்கப்படும் ராணுவ வெறித்தனம் மிக்க முடிவுகளின் சுமை, உலகளவில் சமமற்று விநியோகிக்கப்பட்டு ஏழைகள் மீது திணிக்கப்படுகிறது. 1970-களின் கடன் நெருக்கடி, 2008-ன் உலக நிதி நெருக்கடி மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் மோதல்கள் என வரலாறு மீண்டும் மீண்டும் இதையே நிரூபிக்கிறது.

இந்தியாவின் எரிசக்தி பலவீனமும் அச்சுறுத்தல்களும்

உலகின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளர் களில் ஒன்றான இந்தியா, மேற்கு ஆசியாவின் இந்த நிலையற்ற தன்மையால் மிகக் கடுமையான அச்சுறுத்த லுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா தனது ஆற்றல் மூலங்களை ஓரளவுக்குப் பல்வகைப்படுத்தி, மூலோ பாயப் பெட்ரோலியக் கையிருப்புகளை உருவாக்கி யிருந்த போதிலும், கச்சா எண்ணெய் இறக்குமதியே நாட்டின் பொருளாதார உந்துசக்தியாக உள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவின் பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நிதித் திட்டமிடலை உடனடி யாகச் சிதைக்கும். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதுடன், உர உற்பத்திச் செலவு கூடி விவசாயத் துறையையும், உற்பத்தித் துறையை யும் முடக்கும். சாமானிய இந்தியர்களுக்கு இது புவிசார் அரசியல் விவாதம் அல்ல; மாறாக, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வாழ்வாதார முடக்கம் போன்ற நேரடிப் பாதிப்பாகும். வறுமை ஒழிப்பிலும் சமூக நலத் திட்டங்களில் இந்தியா பெற்றுள்ள முன்னேற்ற ங்களை இந்த நீடித்த எரிசக்தி அதிர்ச்சி பின்னோக்கி இழுத்துவிடும் அபாயம் உள்ளது.

இந்தியா - ஈரான் உறவும் அமெரிக்காவின் முடக்கமும்

வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. அமெரிக்கா வின் தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு வரை, இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்கு மதியில் 10 முதல் 16 சதவீதம் வரை ஈரான் வழங்கி வந்தது; இந்தியாவின் முதல் மூன்று முக்கிய எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஈரானும் ஒன்றாக இருந்தது. இரு நாடுகளும் ‘ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா’ எரிவாயுக் குழாய் திட்டம் மற்றும் ஃபர்சாத்-பி எரிவாயு வயல் மேம்பாடு ஆகியவற்றிலும் ஒத்துழைக்கத் திட்டமிட்டிருந்தன. எரிசக்திக்கும் மேலாக, இந்தியாவின் யூரேசிய இணைப்பு எனும் நீண்டகாலத் திட்டத்தில் ஈரான் மிக முக்கியப் புள்ளியாகத் திகழ்கிறது. ஈரானின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சியும், அதனை ‘சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடன்’ ஒருங்கிணைப்பதும், பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இந்தியா நேரடியாகச் சென்றடை வதற்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த உத்தியாகும். 2024-ல் இதற்காக 10 ஆண்டு கால நீண்டகால ஒப்பந்தமும் கையெழுத்தானது. இருப்பினும், அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தி லிருந்து ஒருதலைப்பட்சமாக விலகி, ஈரான் மீது மீண்டும் கடுமையான தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டணிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து, இந்தியா 2019-ல் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தியதுடன் தனது முதலீடுகளையும் குறைத்துக்கொண்டது. இத்தகைய தடைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், மத்திய ஆசியாவிற்குள் நுழைவதற்கான ஒரே நடை முறை வழி சபஹார் துறைமுகம் என்பதால், இந்தியா இப்போதும் ஈரானைத் தனது முதன்மை முக்கி யத்துவம் வாய்ந்த கூட்டாளியாகவே கருதிவருகிறது.

பேரழிவுக்கு முந்தைய ராஜதந்திரம்

இத்தகைய பின்னணியில், போர் உள்ளிட்ட பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கான தூதரகப் பேச்சு வார்த்தைகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற கூட்டு மேம்பாட்டு உத்திகள் உலக நாடுகளுக்கு ஏற்கனவே தெரிந்தவைதான் என்றா லும், வல்லரசுகள் தொடர்ந்து ராணுவத் தீர்வு களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. உலக தெற்கின் முதன்மை நோக்கம் மற்றும் முன்னுரிமை என்பது நிலையான ஆற்றல் சந்தை, மலி வான உணவு, கடன் நிவாரணம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய வளர்ச்சி சார்ந்த தேவைகளே தவிர ராணுவம் சார்ந்தது அல்ல. தாங்கள் உருவாக்காத, தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு போருக்காக, உலகின் மிக ஏழ்மையான நாடுகளும் மக்களுமே எப்போதும் மிக உயர்ந்த விலையைச் செலுத்துகிறார்கள் என்ற கசப்பான உண்மையை இந்த சர்வதேச ஏகாதிபத்தியச் சூழல் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது. தமிழில் சுருக்கம் : எஸ்.எம். இப்ராகிம் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜூன் 14)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.