மோடி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திலும் ஏகாதிபத்திய விசுவாசத்திலும் மூழ்கியுள்ளார் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் சாடல்
5 Feb 2026, 3:40 pm
<p><strong>மோடி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திலும் ஏகாதிபத்திய விசுவாசத்திலும் மூழ்கியுள்ளார் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் சாடல்</strong></p>
<p>சென்னை, பிப். 5 - பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திலும் ஏகாதிபத்திய விசுவா சத்திலும் மூழ்கி உள்ளார் என்று சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் பேசியுள்ளார். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழி லாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை கண்டித்து பிப்.12 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்ற உள்ளது. இதனையொட்டி புதனன்று (பிப்.4) புரசைவாக்கத்தில் சென்னை மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எஸ்.கண்ணன், காலனி யாதிக்க காலம் முதல் சுரண்டலுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக வேலை நிறுத்தம் இருந்து வரு வதாகவும், பிப்ரவரி 12 போராட்டம் உழைக்கும் வர்க்கத்தின் மரியாதையை நிலைநாட்டும் போர் என்றும் குறிப்பிட்டார். 8மணி நேர வேலை மற்றும் மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை உரிமைகள் தொழிற்சங்கப் போராட்டங் களால் வந்தவை என்பதை நீதித்துறையும் அரசும் உணர வேண்டும் என வலி யுறுத்திய அவர், கார்ப்ப ரேட் லாபம் மட்டுமே நாட்டின் வளர்ச்சியாகாது என்று சாடினார். பிரதமர் மோடி ஏகாதிபத்திய விசு வாசத்துடன் தொழிலாளர் உரிமைகளைச் சிதைப்ப தாகக் குற்றம் சாட்டினார். ஐ.டி முதல் கட்டுமானத் துறை வரை அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் திரண்டு இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார். எல்பிஎப் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற் இந்த கூட்டத்தில் சி.ஹச்.வெங்கடாச்சலம் (ஏஐபிஇஏ), வி.குப்புசாமி ஜி.செந்தில்குமார் எஸ்.கே. முருகேஷ் (சிஐடியு), எம்.ராதகிருஷ்ணன், மு.சம்பத் (ஏஐடியுசி), வேலுசாமி (எல்பிஎப்), சுப்பிரமணிய பிள்ளை (ஹச்எம்எஸ்), முனுசாமி (ஏஐசிசிடியு), பேரறிவாளன் (எல்எல்எப்), சுகுமார் (ஐஎன்டியுசி), சடையாண்டி (ஏஐயுடியுசி), மாயண்டி (டியுசிசி), பழனி (யுடியுசி), ராம்குமார் (டபுல்யுபிடியுசி), சுமதி (பெண் தொழிலாளர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.</p>
