பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்
24 Mar 2026, 3:23 pm
<p><strong>பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்</strong>’</p>
<p>இராஜபாளையம், மார்ச் 24- இராஜபாளையம் ரயில் நிலையத்தில் பெண் பயணி களிடம் பாதுகாப்பு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்பு பாதை ரயில் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் பய ணத்தின்போது சந்தேகப்படும் படி எதுவும் இருந் தாலோ, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மேலும் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் மொபைல் போனில் காவல் உதவி ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்த நிகழ்வின்போது, மத்திய ரயில்வே பாதுகாப்பு படை துணை சார்பு ஆய்வாளர் சங்கரீஸ்வரன் இருந் தார். காவலர் சுரேஷ் மற்றும் பெண் பயணிகள் கலந்து கொண்டனர்.</p>
