இலுப்பூர் தியாகி வி. கோவிந்தராஜ் நினைவு தினம்: சிபிஎம் நிதியளிப்பு
9 Feb 2026, 3:02 pm

இலுப்பூர் தியாகி வி. கோவிந்தராஜ் நினைவு தினம்: சிபிஎம் நிதியளிப்பு

மயிலாடுதுறை, பிப்.9- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், இலுப்பூர் தியாகி வி. கோவிந்தராஜ் 43 ஆம் ஆண்டு நினைவு தின கட்சி நிதியளிப்பு - பொதுக்கூட்டம் ஞாயிறன்று ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஆர். ராணி, ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ். ஆசிக் ரஹ்மான், கிளைச் செயலாளர் ரமேஷ், ஏ. மகாலிங்கம், எஸ். ராஜேந்திரன், ஆர். பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் என். பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி சிறப்புரையாற்றினார். முன்னதாக, தரங்கம்பாடி ஒன்றியக்குழு சார்பில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 959, முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிதியை ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன், தலைவர்களிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், டி. சிம்சன், ஜி. வெண்ணிலா, சி. விஜயகாந்த், கே.பி. மார்க்ஸ், டி.ஜி. ரவி, அமுல்காஸ்ட்ரோ உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கட்சியினர், கிராம பொறுப்பாளர்கள், பொதுமக்கள், இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கே. செந்தில்குமார் நன்றி கூறினார்.