அரசு அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியால் மக்கள் பாதிப்பு
25 May 2026, 1:35 am
<p><strong>அரசு அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியால் மக்கள் பாதிப்பு</strong></p><p>தருமபுரி, மே 24- நல்லம்பள்ளி அருகே அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் கல் குவாரியால், அப்பகுதி விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பாதிப் பிற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகரில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் ராட்சத பாறை களுக்கு வெடி வைத்து, சிறு ஜல்லி, பெரு ஜல்லி, எம்.சாண்ட் ஆகி யவை இரவு-பகலாக டன் கணக்கில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கல்குவாரியை சுற்றிலும் ராஜூவ்காந்தி நகர், காம ராஜ் நகர், கோம்பை, காளிகொட் டாய், கௌத்துகொட்டாய் ஆகிய கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளும், பல நூறு ஏக்கர் விவசாய விளை நிலங்களும் உள்ளன. விவசாய தொழிலை மட்டும் நம்பி, மேற் கண்ட கிராம மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் தூசி. விவசாய நிலங்களில் சாகுபடி செய்துள்ள மஞ்சள், கரும்பு, நெல், வாழை ஆகிய பயிர்களில் படர்வ தால், பயிர்கள் மலட்டுத் தன்மைக்கு மாறி, பெரும் இழப்பீட் டிற்கு விவசாயிகள் ஆளாகி வரு கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட கல்கு வாரியை நடத்தக்கூடாது என அப் பகுதி கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பே எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நடத்தியதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனு மதியை ரத்து செய்தது. தற்போது சட்ட விரோதமாக வெளியில் இருந்து இரவு நேரங்களில் கற் களை கடத்திக் கொண்டு வந்து சிறு ஜல்லி, பெரு ஜல்லி எம்.சாண்ட் தயார் செய்து அதிகாரிகளின் துணையோடு தினசரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஓராண்டாக நிம்மதியாக இருந்த அப்பகுதி பொதுமக்கள், தற்போது இரவு பக லாக சட்டவிரோதமாக இயங்கும் இந்த கல்குவாரியால் பாதிப்பிற் குள்ளாகி வருகின்றனர். மேலும், விவசாயம் முற்றிலும் முடங்கியுள் ளது. குடியிருப்புகளில் தூசி படர்வ தால் பொதுமக்கள் ஆஸ்துமா. மூச் சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தருமபுரி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் உள்ளிட்டவைகளை சீல் வைத்து மூடுவதுடன், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
