முந்தய பக்கம்

அதிகாரிகள் உதவியுடன் சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை

22 May 2026, 1:36 am
அதிகாரிகள் உதவியுடன் சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை
<p><strong>அதிகாரிகள் உதவியுடன் சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை</strong></p><p>கடலூர், மே 21- கடலூர் மாவட்ட கனிமவள துறை அதி காரிகள் உதவியுடன் பண்ருட்டி அருகே சட்ட விரோதமாக விளை நிலங்களில் மணல் எடுக்கப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் சென்ற 8 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மனம்தவிழ்ந்த புத்தூர் பகுதியில் உள்ள விளை நிலங்களில் சவுடு மண் அள்ளு வதாக போலியாக அனுமதி பெற்று, கனிமவள துறை அதிகாரிகள் உதவியுடன் மணல் அள்ளப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதி மக்கள் பலமுறை மாவட்ட கனிம வள அதிகாரி செல்வசேகரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி க்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் எஸ்.பி தனிப்படை போலீசார் சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்லப்பட்ட 8 மணல் லாரிகளை மடக்கி பிடித்து லாரி பறிமுதல் செய்து பண்ருட்டி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர் கடலூர் மாவட்டம் முழுவதும் கனிமவள அதிகாரி உதவியுடன் 100 கணக்கான லாரிகளில் தினந்தோறும் இந்த மணல் கடத்தல் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram