நொய்யல் ஆற்றில் முறைகேடாக மண் எடுப்பு
13 hours before
<p><strong>நொய்யல் ஆற்றில் முறைகேடாக மண் எடுப்பு</strong></p><p>கோவை, செப்.9–சோமனூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் நடுப்பகுதியில், ஆற்றை தூர்வாரி சுத்தம்செய்வதாகக்கூறி பல்லாயிரக்கணக்கான லோடு மண் முறைகேடாக அள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே சோமனூர் வழியாக பாயும் நொய்யல் ஆற்றில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆற்றை தூர்வாருவதாகக்கூறி, ஆற்றுப்படுகையின் நடுப்பகுதியில் ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகமண் அள்ளப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சுத்தம் செய்யும் பணி என்ற போர்வையில்இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான லோடுவண்டல் மண் மற்றும் ஆற்று மணல் வெட்டிஎடுக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடைபெறும் இந்த சட்டவிரோத மண் எடுப்பை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அறக்கட்டளை மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
