தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத கனிம வளக் கடத்தலா?

14 Jul 2026, 10:00 pm
எல்லைப் பகுதிகளில்  சட்டவிரோத கனிம வளக் கடத்தலா?

எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத கனிம வளக் கடத்தலா?

சிவகங்கை, ஜூலை 14- சிவகங்கை–இராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மண் கடத் தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட் டுக்கு மத்தியில், மானாமதுரை அருகே வேதி யரேந்தல் காட்டுப் பகுதியில் பெருமளவில் மணல் மற்றும் கிராவல் மண் குவிக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதை யடுத்து சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள னர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அனு மதி பெற்ற கிராவல் குவாரிகளுக்கு செல் லும் கனரக லாரிகள், சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக தொடர்ந்து இயக்கப்படுவதாகவும், அந்த வழித்தடங் களை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மண் கடத்தப்படு வதாகவும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வரு கின்றனர்.

மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட கோச்சடை, தெற்கு புதுக்கோட்டை, அய்ய னார் குளம் கண்மாய் மற்றும் சுற்று வட்டா ரப் பகுதிகளில் கிராவல் மண் அகழ்வால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கடுமையாக சேதம டைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் கார ணமாக கண்மாய்களுக்கு செல்ல வேண் டிய மழைநீர் ஆழமான பள்ளங்களில் தேங்கி நிற்பதால், சுமார் 100 ஏக்கர் பாசன விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவ சாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாயிகள் அமைத்த சிறிய வாய்க்கால்களும் கனரக லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்தால் சேதம டைந்ததால், பாசனத்திற்கான தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் காவல்துறை யினரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப் படும் நிலையில், மானாமதுரை அருகே வேதியரேந்தல் காட்டுப் பகுதியில் குவி யல் குவியலாக ஆற்று மணல் மற்றும் கிரா வல் மண் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பி னர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்த தாக கூறப்படுகிறது.

இதையடுத்து, எம்.எல்.ஏ. இளங்கோ வன், கட்சி நிர்வாகிகள் மற்றும் மானா மதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெருமளவில் ஆற்று மணல் மற்றும் கிராவல் மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வரு வாய்த் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். ப

ல ஆண்டுகளாக சட்டவிரோத மணல் மற்றும் கிராவல் மண் கடத்தல் நடைபெறு வதாக புகார்கள் எழுந்தும், தற்போது பெரு மளவில் மணல் குவியல்கள் கண்டுபிடிக் கப்பட்டிருப்பது அதிகாரிகளின் கண்கா ணிப்பு செயல்பாடு குறித்து கேள்வி எழுந் துள்ளது.

எல்லைப் பகுதிகளில் நடை பெறும் சட்டவிரோத கனிம வளக் கடத்தலை தடுக்க வேண்டிய வருவாய்த் துறை, கனிம வளத் துறை மற்றும் காவல்துறையினர் போதிய கண்காணிப்பில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும், கனரக லாரிகளின் தொடர்ச்சி யான போக்குவரத்தால் மானாமதுரை–இளையான்குடி மற்றும் மானாமதுரை–பரமக்குடி சாலைகள் கடுமையாக சேதம டைந்து, பொதுமக்களும் வாகன ஓட்டி களும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்துவோர் மட்டுமின்றி, இதை கண்கா ணிக்கத் தவறிய அல்லது உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட நிர்வா கங்கள் இணைந்து விரிவான விசாரணை நடத்தி, சட்டவிரோத மணல் மற்றும் கிரா வல் மண் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.