தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அருமனையில் அனுமதியின்றி செயல்பட்ட பன்றி பண்ணைகள் அகற்றம்

13 Jul 2026, 9:42 pm
அருமனையில் அனுமதியின்றி செயல்பட்ட பன்றி பண்ணைகள் அகற்றம்
<p><strong>அருமனையில் அனுமதியின்றி செயல்பட்ட பன்றி பண்ணைகள் அகற்றம்</strong></p><p>அருமனை, ஜூலை 13 - குமரி மாவட்டம் அருமனை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பன்றி பண்ணையை அதிகாலையில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த பன்றி பண்ணைகளின் கழிவுகள் வாய்க்கால்களிலும் ஆறுகளிலும் குளங்களிலும் கலக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போராட்டங்களும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பத்துகாணியில் ஒரு பன்றி பண்ணை அகற்றப்பட்டது. அப்போது அருமனை மற்றும் கடையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பன்றி பண்ணைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு அனுமதி இல்லாமல் செயல்படுகிற பன்றி பண்ணைகளை கண்டறிந்து, அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலையில் அருமனை அருகே படப்பச்சை பகுதியில் செயல்பட்டு வந்த நான்கு பன்றி பண்ணைகளை அகற்றுவதற்காக விளவங்கோடு வட்டாட்சியர் லயோலாபாய் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி நல்லசிவம், அருமனை காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான காவல்துறையினர், அருமனை பேரூராட்சி செயல் அலுவலர் தர்மர்குலசிங்கம் மற்றும் ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று பன்றி பண்ணையில் இருக்கும் பன்றிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை முதல் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு பன்றி பண்ணையை அகற்றும் நடவடிக்கையை திங்கட்கிழமை காலையில் நடைமுறைப்படுத்த அதிகாரிகள் வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள் அப்பகுதியில் சென்று முகாமிட்டிருந்தனர். ஆனால் காவல்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்தனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.