தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வங்கிகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: ஒரே ஆண்டில் மட்டும் 49 ஊழியர்கள் கைது

2 Jan 2026, 3:33 pm
வங்கிகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்:  ஒரே ஆண்டில் மட்டும் 49 ஊழியர்கள் கைது
<p><strong>வங்கிகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: &nbsp;ஒரே ஆண்டில் மட்டும் 49 ஊழியர்கள் கைது</strong></p> <p>சென்னை, ஜன. 02 - சென்னையில் உள்ள தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் போலி கையெழுத்திடுதல் மற்றும் அனுமதியின்றி பணத்தை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக, 2025ஆம் ஆண்டில் மட்டும் மேலா ளர்கள் உட்பட &nbsp;மொத்தம் 49 வங்கி ஊழியர்களை சென்னை பெருநகர காவல்துறையின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. &nbsp;குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தி யர்களின் (என்.ஆர்.ஐ) நிலையான வைப்புத் தொகையைக் &nbsp;குறிவைத்து, போலி கையெழுத்துகள் மூலம் பணத்தை அபகரித்ததாக மத்திய குற்ற ப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். இந்த மோசடிகளில் இது வரை 67 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலை யில், 12 பேர் தலைமறைவாக உள்ளனர். இண்டஸ்இண்ட் வங்கி மோசடி: &nbsp;அமெரிக்காவில் வசிக்கும் தீன தயாளன் தினகர் பாண்டியன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர், சென்னை அண்ணா நகரில் உள்ள &nbsp;இண்டஸ்இண்ட் வங்கியில் வைத்திருந்த என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ &nbsp;கணக்குகளில் இருந்து பணம் &nbsp;எடுக்கப்பட்டதாகப் புகார் அளித்தனர். விசாரணையில், 2015 முதல் 2020 வரை சுமார் ரூ.21.43 கோடி பணம் போலி கையெழுத்து மற்றும் காசோலைகள் மூலம் திருடப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய காசாளர்கள் மற்றும் துணை மேலாளர் உள்ளிட் டோர் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப் பட்டனர். பல்லவன் கிராம வங்கி மோசடி: &nbsp;சுலைமான் என்பவர் தனது தங்க நகைகளை அடகு வைக்க மேலாளர் சாமிநாதனை அணுகியபோது, சுமார் 162 சவரன் நகைகளை மேலாளர் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல் ஏமாற்றியுள்ளார். விசாரணையில், அந்த மேலாளர் செயல்படாத கணக்கு வைத்திருப்பவர்களின் பெயரில் போலி கையெழுத்திட்டு நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி செய்தது அம்பலமானது. வேளச்சேரி தனியார் வங்கி: &nbsp;வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் லாக்கர் வசதிக்கு பொறுப்பான மேலாளர், வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் லாக்கரில் இருந்து 238 கிராம் தங்க நகைகளைத் திருடி விற்றதை ஒப்புக்கொண்டார். யெஸ் வங்கி (இந்திரா நகர்) மோசடி: &nbsp;இந்திரா நகர் கிளையின் முன்னாள் மேலாளர் பேட்ரிக் ஹோப்மேன், அதிக லாபம் தருவதாகக் கூறி ராஜேந்திரன் மெய்யப்பன் என்ற வெளிநாடு வாழ் இந்தியரிடம் இருந்து ரூ.17.5 கோடி பெற்று மோசடி செய்துள்ளார். போலி கையெழுத்து மூலம் வைப்புத் நிதி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை அவர் கையாடல் செய்ததாகக் கூறப் படுகிறது. தற்போது லண்டனுக்குத் தப்பியோடியதாகக் கருதப்படும் ஹோப்மேனுக்கு எதிராக &lsquo;ரெட் கார் னர்&rsquo; நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் வங்கி மோசடி தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 67 குற்றவாளிகளில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீத முள்ளவர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.