நடமாடும் மதுக்கடைகளாக மாறும் நகரங்கள்!
8 Jul 2026, 1:17 am
<p><strong>நடமாடும் மதுக்கடைகளாக மாறும் நகரங்கள்!</strong></p><p>- எம்.பிரபாகரன் - நாமக்கல், ஜூலை 7- நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் மற்றும் குமாரபாளை யம் பகுதிகளில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி நடக்கும் சட்ட விரோத மது விற்பனையால், நெச வுத் தொழிலாளர்கள், கூலித் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் சீரழிவ தோடு சமூகச் சீர்கேடுகளும் அதிக ரித்து வருகின்றன. விசைத்தறித் தொழில் அதிகம் நிறைந்த இப்பகுதியில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வாரம் முழு வதும் உழைத்து ஞாயிறன்று வாங் கும் கூலிப் பணத்தை வைத்து, குடும்பச் செலவுகளை திட்டமிடும் தொழிலாளர்களை குறிவைத்து இந்த சட்டவிரோத மது விற்பனை ஜோராக நடக்கிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரங் களில், இருசக்கர வாகனங்களி லேயே மது பாட்டில்களை சுமந்து கொண்டு திரியும் ’நடமாடும் மதுக் கடைகள்’ பெருகிவிட்டன. அரசு மதுக்கடைகளில் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக விரோதிகள் மொத்தமாக மதுவை வாங்கி வீடுகளில் பதுக்கி வைக் கின்றனர். அரசுக்கடைகளில் ரூ.140-க்கு விற்கப்படும் மதுவை, நேரத்திற்குத் தகுந்தபடி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்று கொள் ளையில் ஈடுபடுகின்றனர். ”10 பாட் டில் விற்றால் 1 பாட்டில் இலவசம்” என்ற ஆசையை காட்டி, வறுமை யில் உள்ள சில விசைத்தறி தொழி லாளர்களையே இந்த சட்டவிரோத தொழிலில் இடைத்தரகர்களாக மாற்றியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளை வாட கைக்கு எடுத்து, வாடிக்கையாளர் களுக்கு தங்களின் செல்போன் எண்களை கொடுத்துள்ளனர். எப் போது கூப்பிட்டாலும் இருக்கும் இடத்திற்கே தேடி வந்து ‘டோர் டெலிவரி’ செய்யும் அளவிற்கு இந்த நெட்வொர்க் வலுவாக செயல் படுகிறது. போலீசில் புகார் அளித்து பிடித்தாலும், அவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு பாட்டில்கள் மட் டுமே இருப்பதால், சாதாரண அப ராதத்துடன் தப்பிவிடுகின்றனர். பள்ளிபாளையம் காவல் நிலை யத்திலிருந்து வெறும் 600 மீட்டர் தொலைவிலும், ஆவரங்காடு கிருஷ்ணவேணி மகளிர் உயர் நிலைப்பள்ளி, அரசு மருத்துவ மனை, கட்சி அலுவலகங்கள் ஆகி யவற்றுக்கு மிக அருகிலும் இந்த அவலம் அரங்கேறுகிறது. பள்ளி யின் அருகே நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களை சாதகமாக பயன்படுத்தி இந்த மது வியாபாரம் நடப்பதால், இப்பகுதியே குடிமகன் களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், காலையிலும் மாலையி லும் பள்ளிக்கு செல்லும் மாணவி கள் மிகுந்த அச்சத்தோடும், வேத னையோடும் கடந்து செல்ல வேண் டியுள்ளது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை தூய் மைப் பணியாளர்கள் வேதனையு டன் அகற்றி வருகின்றனர். மாணவிகளின் பாதுகாப்பு மற் றும் உழைக்கும் வர்க்கத்தின் நலன் கருதி, மாவட்டக் காவல்துறை உட னடியாக இதில் தலையிட வேண் டும். அரசுப் பள்ளிகள் அருகே வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து, சட்டவிரோத மது விற்பனை கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.</p>
