அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்; இருவர் மீது நடவடிக்கை
8 Jun 2026, 1:06 am
<p><strong>அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்; இருவர் மீது நடவடிக்கை</strong></p><p>நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து கடத்திய அதிநவீன இயந்திரத்தை மாவட்ட கனிமவளத் துறையினர் பறி முதல் செய்தனர். இதுதொடர்பாக நில உரிமையாளர் உட்பட இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் அடுத்துள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சில மாதங்களாக, மணிவே லின் ஒப்புதலோடு கனகராஜ் என்ப வர் தமிழ்நாடு அரசிடம் முறையான எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாகப் பாறைகள் மற்றும் கிரா வல் மண்ணை வெட்டி எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்து வந்துள் ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கனிமவளத் துறைக்கு ரகசியத் தக வல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட உதவி புவியியலாளர் மற் றும் சுரங்கத்துறை அலுவலர் ஜெக தீஷ், கனிமவள தனி வருவாய் ஆய் வாளர் அசோகன், புஞ்சை இடையார் கீழ்முகம் வருவாய் ஆய்வாளர் ராம சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடி விசாரணை மற்றும் கள ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், சுமார் இரண்டு ஏக்கருக் கும் அதிகமான பரப்பளவில், 10 அடிக்கும் கூடுதலான ஆழத்திற்கு பாறைகள் மற்றும் கிராவல் மண்ணை தோண்டி எடுத்து சட்ட விரோதமாக கடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கனிம வளங் களை வெட்டி எடுக்க பயன்படுத்தப் பட்ட பொக்லைன் இயந்திரத்தை அதி காரிகள் சனியன்று பறிமுதல் செய்து, பரமத்தி வேலூர் காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். மேலும், சட்ட விரோத கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட நில உரிமையாளர் மணி வேல் மற்றும் கனகராஜ் ஆகிய இரு வர் மீதும் கனிமவளத் துறை அதிகாரி கள் துறை ரீதியாக கடுமையான நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
