சட்டவிரோதமாக செயல்பட்ட சாய ஆலைகளுக்கு சீல்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>சட்டவிரோதமாக செயல்பட்ட சாய ஆலைகளுக்கு சீல்</strong></p>
<p>நாமக்கல், நவ.12- ஒரே நாளில் குமராபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிக ளில் சட்டவிரோதமாக சாய நீரை வெளியேற்றிய மூன்று சாய ஆலை களின் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டு ஆலைகளுக்கு அதிகாரி கள் சீல் வைத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் மற்றும் பள்ளிபாளை யம் பகுதிகளில் பிரதான தொழிலாக ஏராளமான சாய ஆலை நிறுவனங் கள் இயங்கி வருகிறது. இங்கு சட்ட விரோதமாக சுத்திகரிப்பு செய்யாமல் சாயநீரை நேரடியாக கால்வாய் மூலம் ஆற்றில் கலப்பதால் பொது மக்கள் பல்வேறு இன்னலுக்குள் ளாகி வருகின்றனர். இந்நிலையில் குமாரபாளையம் பகுதியில் ஜெயா லுங்கி டையிங் பேக்டரி, மகேஷ் குமார் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இரண்டு டையிங் நிறுவனங்கள் சட்ட விரோதமாக சாய தண்ணீரை சுத்திகப்பு செய்யாமல் நேரடியாக கால்வாய் மூலம் காவேரி ஆற்றில் கலப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற் றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகளுக்கு புகார் அளித்தனர். புகா ரின் அடிப்படையில் மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் ஆய்வு செய்த பொழுது இந்த இரண்டு நிறுவனங்களும் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கலர், கலராக சாய தண்ணீரை வெளி யேற்றி வருவது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இரண்டு சாய ஆலை நிறுவனங்களின் மின் சார இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் பள்ளிபாளையம் சமய சங்கிலி கிரா மத்தில் ஏற்கனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாய்நாத் என்ற நிறு வனத்தில் இரவு நேரத்தில் ஜென்செட் அமைத்து சாயப்பட்டறையை இயக்கி சுத்திகரிக்கப்படாத சாய நீரை காவிரி ஆற்றில் ரகசிய குழா யின் மூலம் வெளியேற்றி வந்துள்ள னர். இதனை தொடர்ந்து அப்பகுதி யை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த நிறுவனத்திற் கும் சீல் வைத்தனர். ஒரே நாளில் குமராபாளையம் மற்றும் பள்ளி பாளையம் பகுதிகளில் சட்டவிரோத மாக சாய நீரை வெளியேற்றிய மூன்று சாய ஆலைகளுக்கு புதனன்று அதி காரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக் கது.</p>
