தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனல் மின்நிலையங்களில் சட்டவிரோத ஒப்பந்தத் தொழிலாளர் முறை - கே.விஜயன்

yesterday
அனல் மின்நிலையங்களில்  சட்டவிரோத ஒப்பந்தத் தொழிலாளர் முறை - கே.விஜயன்

அனல் மின்நிலையங்களில் சட்டவிரோத ஒப்பந்தத் தொழிலாளர் முறை - கே.விஜயன்

தமிழ்நாட்டின் மின்தேவையில் ஒரு பகுதியை மின்வாரியத்துக்குச் சொந்தமான அனல்மின் நிலையங்கள் நிறைவு செய்கின்றன. “நவீனத் தொழில்நுட்பம்” என்றுசொல்லப்பட்டாலும், அவற்றை இயக்கவும் பராமரிக்கவும் சுத்தம் செய்யவும் ஏராளமான தொழிலாளர்கள் தேவை. ஆனால் “கூடுதல் ஊழியர்கள்” என்று சொல்லி ஒன்றிய அரசு தலையிட்டு, ஒருமெகாவாட்டுக்கு 4 தொழிலாளர்கள் என்ற அளவை படிப்படியாக 0.5 ஆகக் குறைத்துவிட்டது. வடசென்னை அனல்மின்நிலையத்துக்கு 700 பேர் போதும் என்கிறார்கள். ஒன்றிய–மாநில அரசுகள் இணைந்து நடத்தும் 1,500 மெகாவாட் வல்லூர் அனல் மின்நிலையத்தில் ஒரு நிரந்தரத் தொழிலாளர்கூட இல்லை. கணக்கில் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே வருவதால், அங்கே“பூஜ்யம் தொழிலாளர்கள்”! ஆனால் ஏராளமான உபகரணங்களைக் கொண்ட அந்த நிலையங்களை இயக்குவது யார்? ஒப்பந்தத் தொழிலா ளர்கள்தான்.

உழைப்பைப் பொருளாக்கும் கணக்கு

நிரந்தரமாக ஆள் எடுத்தால், அது நிர்வாகத்தின்கணக்கில் “தொழிலாளர் செலவு” ஆகிவிடும். ஒப்பந்தத்தொழிலாளர்களின் செலவோ “பராமரிப்புச் செலவு” என்று பொருள் வாங்கும் கணக்கில் பதிவாகிறது. தொழிலாளர்கள் இருப்பார்கள்; ஆனால் எந்தக் கணக்கிலும் வரமாட்டார்கள். நிரந்தரத் தொழிலாளர்களுக்கான எந்தச்சலுகையும் அவர்களுக்குக் கிடைக்காது. மனிதஉழைப்பைப் பொருட்களோடு இணைப்பது முத லாளித்துவத்துக்குப் புதிதல்ல. இப்படித்தான் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்வைக்கப்பட்டுள்ளனர். உற்பத்திக்கு அவசிய மான நிரந்தரப் பணி என்றாலும், அவர்கள் நிரந்தரம்செய்யப்படுவதில்லை. அடையாள அட்டைகூட வழங்கப்படுவதில்லை; ஆதாரம் உருவாகிவிடுமாம்.பொருட்களுக்குப் போடும் பார்கோடுதான் அவர்களுக்கு அடையாளம்!

தடை இருந்தும் தொடரும் அவலம்

ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல், ஒழிப்பு) சட்டம் 1970, தமிழ்நாடு விதிகள் 1975-ன் கீழ், 1990 ஆகஸ்ட் 8 அன்று வெளியான அரசாணை எண் 950, அனல் மின்நிலையங்களின் முக்கியமான 19 பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. இந்த ஆணைக்கான பணியை முன்னின்று செய்தது மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு). தடை செய்யப்பட்ட பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தத் தொழிலாளர் துறை உரிமம் வழங்காது. 20 பேருக்கு மேல் இருந்தால் உரிமம் இன்றி வேலை வாங்குவதே சட்டப்படி குற்றம்.

தடை செய்யப்பட்ட பணிகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தகுதி பார்க்காமல் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 1999 மே 1 அன்று மின்வாரிய அனல் மின்நிலையங்களில் பணியாற்றிய 8,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். அனல் மின்நிலையங்களில் ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டது என்று மின்வாரியமே அறிவிக்க வேண்டியதானது. ஆனால் 2001 முதல், அதே தடை செய்யப்பட்ட19 பணிகளில் மீண்டும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். 1999-ல் பயன்படுத்தப்பட்ட, தமிழக அரசின் 1981 நிரந்தரப் பணித் தகுதி வழங்கும் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல், ஒழிப்பு) சட்டம் 1970, தமிழ்நாடு விதிகள் 1975-ன் கீழ், 1990 ஆகஸ்ட் 8 அன்று வெளியான அரசாணை எண் 950, அனல் மின்நிலையங்களின் முக்கியமான 19 பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. இந்த ஆணைக்கான பணியை முன்னின்று செய்தது மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு). தடை செய்யப்பட்ட பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தத் தொழிலாளர் துறை உரிமம் வழங்காது. 20 பேருக்கு மேல் இருந்தால் உரிமம் இன்றி வேலை வாங்குவதே சட்டப்படி குற்றம்.

தீர்ப்புகள் இருந்தும் பயனில்லை

2012-இல் வடசென்னை அனல் மின்நிலைய சிஐடியு கிளை தொடுத்த வழக்கை (WP 741/2012), தடையைக் கணக்கில் கொள்ளாமலேயே சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. நாட்டின் 173 அனல் மின்நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உடல்நலப் பாதுகாப்பு கோரி 2005-இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் (WP 79/2005), 2014 ஜனவரியில் தீர்ப்பு வந்தது. அதை அமலாக்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு 2016 ஆகஸ்டில் தீர்ப்பளித்தது. அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக மின்வாரியம் பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்று வரை எதுவும் அமலாகவில்லை. வழக்கில் தலைமைச் செயலாளர், தொழிலாளர், எரிசக்தி, சுகாதாரச் செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எனப் பலர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தும், பதில் அளித்தது மின்வாரியம் மட்டுமே. நிரந்தரத் தொழிலாளர் ஒருவர்கூட இல்லாமல் அனல் மின்நிலையத்தை இயக்குவது குறித்துத் தமிழக அரசின் தொழிற்சாலைத் துறைக்கும் எந்தக் கவலையும் இல்லை.

தூசு, வெப்பம், வேதிப்பொருட்கள், காதைக் கிழிக்கும் சத்தம், சாம்பல், கரி நிறைந்த சூழலில் ஒப்பந்தத் தொழி

லாளர்களும்தான் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மருத்துவ வசதியும் பாதுகாப்பும் இல்லை. நிர்வாகமும் கவலைப்படவில்லை; சட்டம் அமலாகவில்லை என்று நீதிமன்றங்களும் கவலைப்படவில்லை.

அவர்களும் மனிதர்கள்தானே?

மின் உற்பத்தி அவசியம்தான்; மக்கள் பாதிக்கப்படக் கூடாதுதான். ஆனால் அனல் மின்நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களும் மனிதர்கள்தானே? “ஒப்பந்தத் தொழிலாளருக்கும் நிர்வாகத்துக்கும் உறவு இல்லை” என்ற வாதத்தை நீதிமன்றங்கள் ஏற்கின்றன. அப்படியானால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் என்றதும் நிர்வாகங்கள் ஏன் அலறுகின்றன? உற்பத்தியையே நிறுத்தும் சக்தி அவர்களுக்கு இருக்கிறது என்றால், அவர்களின் கோரிக்கை நியாயம்தானே? வேலையும் மேம்பட்ட வாழ்க்கையும் வேண்டும் என்ற கனவு ஒப்பந்தத் தொழிலாளிக்கும் உண்டு என்பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.